search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polling station"

    • பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
    • துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை ஆகியன திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளன.இந்நிலையில் இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகர துணை காவல் ஆணையா் வனிதா, திருப்பூா் சாா் ஆட்சியா் (பொறுப்பு) ராம்குமாா், துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
    • மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை அருகே உள்ள உக்கடை கிராமத்தில் பாபநாசம் விவேகானந்தா கல்வி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம், திருத்தம், நீக்குதல் ஆகியவை சனி, ஞாயிறு நாட்களில் அருகில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ள பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் விஜயலெட்சுமி. கயல்விழி , மேரி உட்பட ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.
    • வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் அமர்ந்து பணியாற்ற தி.மு.க.வில் பூத் ஏஜெண்டுகள் (முகவர்கள்) இப்போதே தயாராக உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தகுதியான நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து (பி.எல்.ஏ.2) வைத்துள்ளனர்.

    அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.

    இந்த வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் ஏற்கனவே திருச்சி, ராமநாதபுரம், காங்கேயம், திருவண்ணாமலையில் கூட்டம் நடந்த நிலையில் இப்போது திரு வள்ளூரில் நவம்பர் 5-ந்தேதி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் 11,569 முகவர்களுடன் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க குன்றத்தூரில் நேற்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்களில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வாகனங்கள் மூலம் திருவள்ளூருக்கு அழைத்து சென்று பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி யில் 323 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை மற்றும் தேவகோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வாக்குச்சாவடி சீரமைப்பு தொடர்பாக பரிந்து ரைகளை தெரிவித்தனர்.

    மேலும் வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு செய்யும் முன் வாக்குச்சாவடி மையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சி யர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடப்பட்டு உள்ளது
    • அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறையின்போது, வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைத்தல் குறித்து, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான விளக்கக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், வரைவு வாக்குசாவடி பட்டியலை, அவர் வெளியிட்டார்.

    வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,62,655 ஆண் வாக்காளர்கள், 6,79,306 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குச்சாவடி மையங்கள், 941 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இதில் நகர எல்லைக்குள்85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக 77 இடம் மாற்றம், வாக்குச்சாவடி பிரிவு மாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் என மொத்தம் 123 மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வாக்காளர் பதிவு அலுவலர்கள்வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா மற்றும் ரெத்தினம் (தி.மு.க.), முகமது சேட் (அ.இ.அ.தி.மு.க.), அப்துல் ஜாபர் (ஆம் ஆத்மி கட்சி), எஸ்.வெங்கட்ராமன் (பாரதிய ஜனதா கட்சி), எஸ்.சங்கர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), சேதுராமன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
    • இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தேனி:

    மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.

    வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

    மக்களவை தேர்தலையொ ட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் வாக்கு ச்சாவ டிகள் பகுப்பாய்வு செய்ய ப்பட்டன. இதில் ஆண்டி பட்டி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவ டிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

    பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவ டிகளில் 7 வாக்குச்சாவடிகள் அமைவிடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. போடி சட்டப்பே ரவை தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடிகளில் 18 வாக்குச்சாடிகள் அமை விடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    28 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. வரைவு வாக்குச்சா வடி பட்டியல் கோட்டா ட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலக ங்கள், நகராட்சி அலுவலக ங்க ளில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளன.

    வரைவு வாக்குச்சாவ டிகள் குறித்த சந்தேகங்கள், திருத்தங்கள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வருகிற 30ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2520 ஆக உயர்ந்துள்ளது.
    • 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024 -ன் திருத்தப்பணிகள் 1.6.2023 முதல் 16.10.2023 வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பணியான வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர்- முதன்மை செயலர் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடிகளை உள்ளடக்கிய "வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல்" அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294 வாக்குச்சாவடிகள், மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளன. எந்தமாற்றமும் இல்லை.

    ஆனால் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் 379 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன.

    அதன்படி 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 8 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து 21.8.2023 முதல் 27.8.2023 வரை கீழே குறிப்பிட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.

    மேற்படி கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
    • சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் செயலாளர் ராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. பகுதி செயலாளர் நடராஜன், சலீம், செயற்குழு உறுப்பினர் விக்ரமன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யாத மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் கடலூர் மாநகரில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. வருகின்ற அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.

    வாக்கு சாவடி முகவர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றிட வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் புதிய மார்க்கெட் கட்டிடம் மற்றும் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு மாநகர திமுக சார்பில் பெருந்திரளாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி ஓ.எல். பெரியசாமி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செல்வமணி, பொருளாளர் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆராமுது, சக்திவேல், இளைஞர் அணி மணிகண்டன், ஜெயமணி, ஜெயச்சந்திரன், குப்புராஜ், கோபி, மாநகர பிரதிநிதி சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 40 தொகுதியிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம்.
    • தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெற்ற தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசியதாவது:-

    நடைபெறவுள்ள நாடா–ளுமன்ற தேர்தலில் நாற்ப–தும் நமதே, நாடும் நமதே என்ற அளவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி பயிற்சி பாசறை கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்த அனுமதி அளித்த முதல்-அமைச்சரும்,தி.மு.க. தலை வருமானமு.க.ஸ்டாலி னுக்கு நன்றி.

    மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி நடைபெற்ற இந்த இடத்தில் முகவர்க–ளுக்கு தேர்தல் என்னும் போரிலர் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் போரில் தி.மு.க. வெல்வது உறுதி.

    இவ்வாறு பேசினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

    தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதி கள் உள்பட தமிழகம், புதுச் சேரி உள்பட 40 தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்கனியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் ஒப்படைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

    தமிழக எம்.பி.க்களின் கொள்கை ரீதியான கருத் துக்களை எதிர்கொள்ள முடியாமல் பிரதமரும், பா.ஜனதாவினரும் தடுமாறி வருகின்றனர். இந்த தேர்தலுக்குப்பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வடிவிலான வெண்கல சிலையை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நினைவு பரிசாக வழங்கினர். இதில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    • சிறப்பு முகாம்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் படிவம் 6B-இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்கா–ளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20,29,246 வாக்காளர்களில் 13,46,249 (66.34 சதவீதம்) வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்று கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடாத பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது வருகிற மார்ச் 31-க்குள் நிறைவடைய உள்ளதால் பொது மக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியர்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ தங்களது ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6B-இல் பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் வாக்காளர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை e- EPIC ஆக தங்களது மொபைலிலேயே டவுன்லோடு செய்திடலாம் . தேர்தல் நடைபெறும் சமயம் வாக்காளர் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்களும் அவர்களது மொபைல் எண்ணிற்கே கிடைக்கப்பெறும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் உள்ளவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமான குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும் மற்றும் அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். மேற்கூறியவாறு அனைத்து வகையான விண்ணப்பங்களையும் Voters Helpline மொபைல் ஆப் மூலமாகவும் NVSP Portal மூலமாகவும் வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
    • வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு இடைத்தேர்தல் நாளை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதையொட்டி முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணியை மும்முரமாக ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர் களாலும் தாசில்தார் அலுவலகங்களிலும் படிவம் 6பி-ல் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 20 லட்சத்து 37 ஆயிரத்து 651 வாக்காளர்களில் 13 லட்சத்து 5 ஆயிரத்து 947 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    பொதுமக்கள் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதே போல் அடுத்த மாதம் 5-ந் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாட்களில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை தாசில்தார்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இவற்றின் மூலம் தங்களை செல்போன் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×