search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடிகள்"

    • மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.
    • நல்லம்பள்ளி தாலுகாவில் 2 புதிய பாகங்களும் என மொத்தம் 4 புதிய வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நசீர் இக்பால், உதவி கலெக்டர்கள் கீதாராணி, வில்சன் ராஜசேகர், தேர்தல் தனி தாசில்தார் அசோக்குமார் மற்றும் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:- தருமபுரி மாவட்ட த்தில் 1485 வாக்குச் சாவடிகளும், 878 வாக்குச் சாவடி மையங்களும் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024 தொடர்பாக புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல், வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    1489 வாக்குச்சாவடிகள் அதன் அடிப்படையில் கடந்த மாதம் 21-ந்தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கோரிக்கைகளை வழங்குமாறு கூறப்பட்டது. இதன்படி அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்ப டையிலும், உதவி கலெக் டர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையிலும் வாக்குச்சாவடி மறுசீர மைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது காரிமங்கலம், அரூர் தாலுகாக்களில் தலா ஒரு புதிய பாகமும், நல்லம்பள்ளி தாலுகாவில் 2 புதிய பாகங்களும் என மொத்தம் 4 புதிய வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. மறு சீரமைப்பிற்கு பின்பு 1,489 வாக்குச்சாவடிகள் உள்ளன. 12 பகுதிகள் சீரமைப்பு, 105 கட்டிடங்கள் இடமாற்றம், 2 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவுகள் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்ற பின்பு வாக்குச்சாவடி பட்டியலில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

    • 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2520 ஆக உயர்ந்துள்ளது.
    • 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024 -ன் திருத்தப்பணிகள் 1.6.2023 முதல் 16.10.2023 வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பணியான வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர்- முதன்மை செயலர் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடிகளை உள்ளடக்கிய "வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல்" அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294 வாக்குச்சாவடிகள், மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளன. எந்தமாற்றமும் இல்லை.

    ஆனால் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் 379 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன.

    அதன்படி 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 8 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து 21.8.2023 முதல் 27.8.2023 வரை கீழே குறிப்பிட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.

    மேற்படி கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூடுதலாக 3 வாக்குச்சாவடிகள் அமைப்பு
    • பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சா வடி மறு சீரமைப்பு தொட ர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலை மையில் நடந்தது.

    தி.மு.க.சார்பில் அகஸ்தீ சன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிரு ஷ்ணன், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கூறியதாவது :-

    வாக்குச்சாவடிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்போது அதன் அருகில் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.

    விளவங்கோடு தொகுதி க்குட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சி பகுதியில் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் இறந்தவர்கள் பெயர்களை வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கினால் 80 முதல் 90 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும். இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதால் தான் வாக்கு சதவீதம் நமது மாவட்டத்தில் குறைவாக இருந்து வருகிறது.

    பூச்சிவிளாகம்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி னார்கள். கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது 1695 வாக்குச்சாவ டிகள் உள்ளது. 1500 வாக்கா ளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு cள்ளது. அதன்படி பத்ம நாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் கூடு தலாக அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தற்போது 1698 வாக்கு சாவடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி தொகு தியை பொறுத்த மட்டில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவிலில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சலில் 300 வாக்குச்சா வடிகளும், பத்மநாப புரத்தில் 273 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூ ரில் 268 வாக்குச்சா வடிகளும், விளவங்கோட்டில் 272 வாக்குச்சாவடிகளும் தற்பொழுது உள்ளது.

    கன்னியாகுமரி தொகுதி யில் 3 வாக்குச்சாவடியும், நாகர்கோவில் தொகுதியில் 16 வாக்குச்சாவடியும், குளச்சல் தொகுதியில் 5 வாக்குச்சாவடியும், பத்மநாப புரத்தில் 10 வாக்குச்சாவடியும், விளவங்கோடு தொகுதியில் 28 வாக்குச்சாவடியும் , கிள்ளியூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடி என 64 வாக்குச்சாவடிகள் தற்பொ ழுது செயல்பட்டு வரும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    6 சட்டமன்ற தொகுதி களிலும் 22 வாக்குச்சாவடி களின் பெயர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .

    அரசியல் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பாக 2 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தால் அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் மற்றும் தேர்தல் தாசில்தார் சுசீலா, தாசில்தார்கள் ராஜேஷ், வினைதீர்த்தான், கண்ணன், அனிதா குமாரி, குமாரவேல், முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×