search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் 64 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்
    X

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் 64 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்

    • கூடுதலாக 3 வாக்குச்சாவடிகள் அமைப்பு
    • பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சா வடி மறு சீரமைப்பு தொட ர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலை மையில் நடந்தது.

    தி.மு.க.சார்பில் அகஸ்தீ சன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிரு ஷ்ணன், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கூறியதாவது :-

    வாக்குச்சாவடிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்போது அதன் அருகில் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.

    விளவங்கோடு தொகுதி க்குட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சி பகுதியில் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் இறந்தவர்கள் பெயர்களை வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கினால் 80 முதல் 90 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும். இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதால் தான் வாக்கு சதவீதம் நமது மாவட்டத்தில் குறைவாக இருந்து வருகிறது.

    பூச்சிவிளாகம்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி னார்கள். கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது 1695 வாக்குச்சாவ டிகள் உள்ளது. 1500 வாக்கா ளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு cள்ளது. அதன்படி பத்ம நாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் கூடு தலாக அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தற்போது 1698 வாக்கு சாவடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி தொகு தியை பொறுத்த மட்டில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவிலில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சலில் 300 வாக்குச்சா வடிகளும், பத்மநாப புரத்தில் 273 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூ ரில் 268 வாக்குச்சா வடிகளும், விளவங்கோட்டில் 272 வாக்குச்சாவடிகளும் தற்பொழுது உள்ளது.

    கன்னியாகுமரி தொகுதி யில் 3 வாக்குச்சாவடியும், நாகர்கோவில் தொகுதியில் 16 வாக்குச்சாவடியும், குளச்சல் தொகுதியில் 5 வாக்குச்சாவடியும், பத்மநாப புரத்தில் 10 வாக்குச்சாவடியும், விளவங்கோடு தொகுதியில் 28 வாக்குச்சாவடியும் , கிள்ளியூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடி என 64 வாக்குச்சாவடிகள் தற்பொ ழுது செயல்பட்டு வரும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    6 சட்டமன்ற தொகுதி களிலும் 22 வாக்குச்சாவடி களின் பெயர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .

    அரசியல் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பாக 2 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தால் அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் மற்றும் தேர்தல் தாசில்தார் சுசீலா, தாசில்தார்கள் ராஜேஷ், வினைதீர்த்தான், கண்ணன், அனிதா குமாரி, குமாரவேல், முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×