search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடு
    X

    வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடு

    • புதுக்கோட்டை வரைவு வாக்குசாவடி பட்டியல் வெளியீடப்பட்டு உள்ளது
    • அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறையின்போது, வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைத்தல் குறித்து, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான விளக்கக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், வரைவு வாக்குசாவடி பட்டியலை, அவர் வெளியிட்டார்.

    வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,62,655 ஆண் வாக்காளர்கள், 6,79,306 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,42,027 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குச்சாவடி மையங்கள், 941 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இதில் நகர எல்லைக்குள்85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக 77 இடம் மாற்றம், வாக்குச்சாவடி பிரிவு மாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் என மொத்தம் 123 மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வாக்காளர் பதிவு அலுவலர்கள்வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா மற்றும் ரெத்தினம் (தி.மு.க.), முகமது சேட் (அ.இ.அ.தி.மு.க.), அப்துல் ஜாபர் (ஆம் ஆத்மி கட்சி), எஸ்.வெங்கட்ராமன் (பாரதிய ஜனதா கட்சி), எஸ்.சங்கர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), சேதுராமன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×