search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picketing"

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது
    • மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் .

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார்.

    நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மணிப்பூர் மாநில கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது,

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது போன்ற மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு செப்டம்பர் 12,13 ,14 ஆகிய மூன்று தேதிகளில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த விடுத்த அழைப்பினை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாட்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் .

    இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வீரமோகன், சேவையா, திருநாவுக்கரசு, கோவிந்தராஜன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கோவிந்தபாடி, கருங்கல்லூர், பண்ணவாடி, செட்டிபட்டி, கத்திரி பட்டி, கோட்டையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.
    • தனியார் வேளாண் நர்சரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மிளகாய் பயிர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் கொளத்தூர் கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலையில் 100- கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் மிளகாய் செடிகளு டன் மறியலில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    கொளத்தூர் ஒன்றியத்தில் மிளகாய் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

    மிளகாய் சாகுபடி

    கோவிந்தபாடி, கருங்கல்லூர், பண்ணவாடி, செட்டிபட்டி, கத்திரி பட்டி, கோட்டையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர். பயிர் செய்து 3 மாதத்தில் மிளகாய் அறுவடை செய்யலாம், முதல் இரண்டு மாதத்தில் பச்சை மிளகாயாகவும், அடுத்து பழுத்த மிளகாய் அறுவடை செய்யப்படும்.

    இந்நிலையில் மூன்று மாதத்திற்கு மேலாகியும் செடிகளில் மிளகாய் காய்க்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதனை அடுத்து மிளகாய் நாற்று விற்பனை செய்த தனியார் வேளாண் நர்ச ரியை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    மறியல்

    தனியார் வேளாண் நர்சரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மிளகாய் பயிர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் கொளத்தூர்

    கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலையில் 100- கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் மிளகாய் செடிகளு டன் மறியலில் ஈடுபட்டனர்.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    பேச்சு வார்த்தை

    இதுபற்றி தெரிவித்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் எம்.எல்.ஏ., விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.மேலும் அரசு அதிகாரிகளிடம் உடனே பொது மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

    • குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காகாபாளையம்:

    சேலம் இடங்கணசாலை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.

    ஒப்பந்த தொழிலாளர்

    இந்த பகுதியில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து, குறிப்பிட்ட ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது.

    மறியல்

    இந்த நிலையில், தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால், அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • சாக்கடை கால்வாய் அமைக்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி திவ்யா தியேட்டர் அருகே ஊத்துக்குளி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சுமார் 15 பேர், கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து, கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    இதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கச்சிராயன்பட்டி ஊராட்சி. மாங்குளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சியில் முறையாக கண்மாய் பணிகள் நடை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதில் ஒரு சிலர் தொ டர்ந்து போலி அட்டையுடன் 100 நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வ தாகவும், அது குறித்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நட வடிக்கையும் மேற்கொள்ள வில்லை என தெரிகிறது.

    ஆகவே இந்த விவகாரத்தில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப்பகுதி பொதுமக்கள் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் இன்று திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட் டத்தில் பங்கேற்றனர்.

    இதுபற்றி தகவலறிந்த கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம், ஆண்டிச்சாமி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 800-க்கு தனியார் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டது.
    • விவசாயிகளுக்கு நஷ்டமாகும் விலையை தனியார் வியாபாரிகள் கேட்பதால் ஏலத்தை புறக்கணித்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய நான்கு இடங்களில் வேளாண் விற்பனை குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்ப ட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருத்தி நல்ல விலைக்கு விற்பனையா னதால், அந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

    சாகுபடி செய்யப்பட்ட பருத்தி அறுவடைப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அறுவடை செய்யப்படும் பருத்தி 100 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படுகிறது.

    இங்கு திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் மறைமுக ஏல முறையில் பருத்தியை வாங்கிச் செல்கின்றனர்.

    குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் 1400 விவசாயிகள் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்பதற்காக தங்கள் பருத்தியை எடுத்து வந்திருந்தனர்.

    அதிகபட்சமாக குவிண்டால் 7080 ரூபா ய்க்கும், குறைந்தபட்சமாக 5800 ரூபாய்க்கும் தனியார் வியாபாரிகளால் ஏலம் கேட்கப்பட்டது.

    கடந்த ஆண்டு குறைந்தப ட்சமாக பருத்தி 8000 ரூபாய் வரை விலை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை மோசடியில் ஈடுபடுவதாகவும், உரம் விலை மற்றும் கூலி ஆட்கள் செலவு, வண்டி வாகன செலவு ஆகியவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நஷ்டமாகும் விலையை தனியார் வியாபாரிகள் கேட்பதாக கூறி, ஏலத்தை விவசாயிகள் புறக்கணி த்தனர்.

    தொடர்ந்து குத்தாலத்தில் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து அதிகா ரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் இரவு 10.30 மணி வரை சாலை மறியல் இரண்டாவது முறையாக நடைபெற்றது.

    மறுபடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நாளை காலை வியாபாரிகளை அழைத்து பேசுவதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    • 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலைக் கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் கச்சிராய பாளையம் அருகே உள்ள வெள்ளிமலைக்கு தான் வர வேண்டும். மலை கிராமங்களுக்கு முக்கிய நகரமாக வெள்ளி மலை திகழ்ந்து வருகிறது. இதனால் வெள்ளி மலைக்கு சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளிமலை பஸ் நிலையத்தை சுற்றி 250 கடைகள் உள்ளது. பஸ் நிலைய விரிவாக்கத்திற்காக பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காலக்கெடுவும் விதித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடைகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சின்னசாமி, கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தினார்கள்.200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இச் சம்பவத்தால் வெள்ளிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இரட்டைமடி வலைகள் மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நாகப்ப ட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கிராம நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலைகளை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தி தொழில் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தமிழ்நாடு கடல் எல்லையில் தொழில் செய்ய வந்தால் விசைப்படகுகளை சிறைபிடித்து மீன்வளத்து றையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளுக்கு வியாபார ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது எனவும், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை நாகை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வழங்க கூடாது என முடிவு செய்துள்ளனர்.

    மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறி தொழில் செய்தால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் வரும் 14ம் தேதி முதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்ட த்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மதுரை விமான நிலைய சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்தனர்.
    • இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெருங் குடி பகுதியில் உள்ள விடு தலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக மாலை அணி விக்க வந்தனர்.

    அவர்கள் செல்லும் பாதையில் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் செல்லுங்கள் என கூறினர். ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறுப்பு தெரிவித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. வசந்த குமார் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜபாளையம் வெண்கொடை திருவிழா விவகாரத்தில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தெருக்களில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழாவை நடத்துவது தொடர்பாக தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட வில்லை எனக்கூறி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு தெருவைச் சேர்ந்தவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார்.

    இந்த நிலையில் அவர்கள் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள கிராம பகுதிகளில் சேத மடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில், பல சாலைகள் சேத மடைந்துள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.விடம் பலமுறை எடுத்துகூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கிராம பகுதியில் சேதம டைந்துள்ள சாலை களை உடனே சீரமைக்க வலியுறுத்தி, காரைக்கால் விடுதலை சிறுத்தை கட்சியினர், 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திருநள்ளாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதனைத் தொடர்ந்து, வி.சி.க.வினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் கே.கே.நகர் உள்ளது. இங்கு புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் நல்ல தண்ணீர் ஊற்றி விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நல்லூர் ஊராட்சி சார்பில் பணியாளர்கள் அந்த தண்ணீர் தொட்டியில் உப்பு தண்ணீர் ஏற்றுவதற்காக குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் பகுதி மக்கள் தண்ணீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டியில் நல்ல தண்ணீர் தான் ஏற்ற வேண்டும் என்று கூறி கே.கே.நகர் பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீரென புதுப்பாளையம் பிரிவு அருகே புளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×