என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட 55 பேர் மீது வழக்கு
- ராஜபாளையம் வெண்கொடை திருவிழா விவகாரத்தில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தெருக்களில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழாவை நடத்துவது தொடர்பாக தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட வில்லை எனக்கூறி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு தெருவைச் சேர்ந்தவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார்.
இந்த நிலையில் அவர்கள் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






