search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rioting"

    • மதுரை விமான நிலைய சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்தனர்.
    • இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெருங் குடி பகுதியில் உள்ள விடு தலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக மாலை அணி விக்க வந்தனர்.

    அவர்கள் செல்லும் பாதையில் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் செல்லுங்கள் என கூறினர். ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறுப்பு தெரிவித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. வசந்த குமார் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் அஸ்லாம் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறார்.


    மூத்த மகள் ஷப்பாவுக்கு திருமணமாகி தனது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். அகமது நிஷா தனது இளைய மகள் அசினாவுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் துபாயில் இருக்கும் மூத்த மகள் ஷப்பாவின் பிரசவத்திற்காக இருவரும் நேற்று இரவு விமானம் மூலம துபாய் சென்றுள்ளனர்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று ஒரு அறையில் இருந்த பொருட்களை திருடி உள்ளனர். மேலும் மற்றொரு அறையில் இருந்த பூட்டை உடைக்கும் போது அதனுடைய சத்தம் வெளியில் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தை சேர்ந்த 2 பெண்கள் ரகமதுன்னிசா வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் முன்பக்க கதவு உடைத்து மர்ம நபர்கள் உள்ளே இருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். அப்போது உள்ளே இருந்த மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சத்தம் போடாமல் அமைதியாக இருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பொருட்களை திருடிக் கொண்டு எந்த வித பயமும் இன்றி ஹாயாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அனைவரும் வெளிநாட்டில் உள்ளதால் திருடு போன பொருட்கள் எத்தனை லட்சம் மதிப்பிலானது, என்னென்ன பொருட்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு என்னதான் தீர்வு என பொதுமக்கள் பீதியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு நிரந்தரமாக தற்போது தீர்வு இல்லை என வெட்ட வெளிச்சமாக தெரிய வருகின்றது. மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வராமலும், வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து சென்றால் மட்டுமே கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    முன்பெல்லாம் ஒரு பகுதியில் ஒரு திருட்டு ஏற்பட்டால் போலீசார் பழைய குற்றவாளி மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குறைந்தபட்ச நாட்களில் குற்றவாளிகளை பிடித்து உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றங்களை தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். தற்போது குற்றவாளிகளை பிடித்தவுடன் விசாரணை செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்காமல் குற்றவாளிகளிடம் உரிய முறையில் விசாரணை நடத்த முடியாததால் போலீசாரால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் எப்படி குற்றவாளிகளை விசாரித்து பொருட்களை கைப்பற்றி இனி வருங்காலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் எப்படி தடுப்பது?மேலும் இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளதால் ஒவ்வொரு போலீசாரும் மிகுந்த அவதியுடன் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே உரிய முறையில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். இதனை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றால் திருடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான வீடு, கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கொள்ளை சம்பவம் நடந்து அனைவரும் வீதியில் நிற்கக்கூடிய நிலை ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆகையால் போலீஸ் உயர் அதிகாரிகள் இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வருவதற்கும் தயக்கம் இன்றி வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×