search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளை காலி  செய்ய கூறியதால் வியாபாரிகள் மறியல்- கடையடைப்பு
    X

    பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி.

    கடைகளை காலி செய்ய கூறியதால் வியாபாரிகள் மறியல்- கடையடைப்பு

    • 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலைக் கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் கச்சிராய பாளையம் அருகே உள்ள வெள்ளிமலைக்கு தான் வர வேண்டும். மலை கிராமங்களுக்கு முக்கிய நகரமாக வெள்ளி மலை திகழ்ந்து வருகிறது. இதனால் வெள்ளி மலைக்கு சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளிமலை பஸ் நிலையத்தை சுற்றி 250 கடைகள் உள்ளது. பஸ் நிலைய விரிவாக்கத்திற்காக பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளை அகற்றும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காலக்கெடுவும் விதித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடைகளை அகற்ற அதிகாரிகள் வந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சின்னசாமி, கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்தினார்கள்.200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இச் சம்பவத்தால் வெள்ளிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×