search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election"

    • 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது.
    • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தலம் மூலம் ஆந்திராவில் நடைபெறும் தேர்தலையொட்டி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதில் ஆந்திர பிரதேச மக்கள் குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    இந்த சாதனை நமது ஜனநாயக உணர்வை மேலும் மேம்படுத்தட்டும் என கூறியுள்ளார்.

    • ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    • மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரெண்டல கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால்,  ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திராவில் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் வாக்காளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • பெண்கள் பற்றி தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்போம்.
    • கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 மாநில பட்ஜெட்டுகளுக்கு தேவைப்படும் நிதி வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கானாவில் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார்.

    இந்த நிலையில் கவர்னராக இருந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டாக்டர் தமிழிசை இன்று சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதாக கூறும் நிலையில் நானும் இங்கு வந்துள்ளேன். இந்த ஆட்சி முற்றிலும் தோற்றுவிட்டது.

    சொல்லாட்சியும் இல்லை. செயலாட்சியும் இல்லை. பொய்யாட்சிதான் நடக்கிறது. கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கரை கைது செய்துள்ளார்கள். கஞ்சா கடத்துபவர்களை உங்களுடன்தான் வைத்திருக்கிறீர்கள். அவர்களையும் கைது செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டுமல்லவா?

    பெண்கள் பற்றி தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்போம். அதற்கு தண்டனை வாங்கி கொடுக்க கஞ்சா தேவையில்லை. சட்டம் போதும்.

    2026 தேர்தலை சந்திக்க இவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவேதான் டி.எம்.கே.வை நம்பாமல் பி.கே.வை (பிரசாந்த் கிஷோர்) நம்புகிறார்கள் என்றார். பின்னர் தெலுங்கானா மாநில தேர்தல் பிரசார அனுபவம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஐதராபாத், செகந்திராபாத் மேடக், சசிராயாத் உள்பட 9 தொகுதிகளில் பணியாற்றினேன். பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ அரங்க கூட்டங்கள் மூலம் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தேன்.

    மன கவர்னர் (மக்கள் கவர்னர்) என்று மக்கள் காட்டிய அன்பு நெகிழ வைத்தது. கடந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் 4 எம்.பி.க்கள் வெற்றி பெற்றார்கள். இந்த தேர்தலில் நவரத்தினங்களுக்கு (9-க்கு) குறையாமல் பாராளுமன்றத்துக்கு செல்வார்கள். ஏற்கனவே 4.5 சதவீதமாக இருந்த வாக்குவங்கி இப்போது 14.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. சமீபத்தில் நடந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் 2 தொகுதியில் பா.ஜனதா வென்றுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்கள். பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, முதியவர்களுக்கு ரூ.4 ஆயிரம் பென்ஷன், விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை, ரூ.2 லட்சம் வரை வங்கி கடன் ரத்து என்று அள்ளிவிட்டார்கள்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 மாநில பட்ஜெட்டுகளுக்கு தேவைப்படும் நிதி வேண்டும். எனவே மக்கள் காங்கிரசின் வார்த்தை ஜாலங்களை புரிந்து கொண்டார்கள். எனவே தெலுங்கானாவும் பிரதமர் மோடியின் குடும்பமாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்.
    • டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து 'ரோடு ஷோ' நடத்தினார். அவர் 2 இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:-

    ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும். கடவுள் எனக்கு 21 நாட்கள் கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் உழைத்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்.

    பா.ஜனதாவின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே 400 இடங்கள் தேவை என்று பா.ஜ.க. கூறுகிறது. சர்வாதிகாரத்தை கொண்டு வரவே அவர்கள் விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு என்னை கைது செய்தது. நான் ஒரு சிறிய மனிதன். எங்களிடம் ஒரு சிறிய கட்சி உள்ளது.

    டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன. இருப்பினும் டெல்லி மக்களுக்காக தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தேன். இது தவறா?

    இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தினார்.

    டெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆம்ஆத்மி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் அவர் விவாதித்தார்.

    அதை தொடர்ந்து பிற்பகலில் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று மாலை அவர் 2 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். மோதி நகர்,உத்தம் நகர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 4 தொகுதிகளில் ஆம்ஆத்மி போட்டியிடுகிறது. எஞ்சிய 3 இடங்களில் காங்கிரஸ் நிற்கிறது.

    • 25 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 454 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • 34 ஆயிரத்து 651 வாக்குவா சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கபட உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் மொத்தம் 25 பாராளுமன்ற தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    பாராளுமன்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனை நிலவுகிறது.

    ஆந்திராவில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இறுதி நாளில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் மற்றும் சித்தூரில் பிரசாரம் செய்தார். கொட்டும் மழையிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், அவர் போட்டியிடும் பிதாபுரம் தொகுதியிலும், காக்கிநாடா தொகுதியிலும் பிரசாரம் செய்தார்.

    பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா திருப்பதியில் பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி,ஒய்.எஸ். சர்மிளாவுடன் இணைந்து கடப்பாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மந்திரி ரோஜா, நகரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

    25 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 454 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 417 ஆண் வேட்பாளர்களும் 37 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் .இதேபோல் 175 சட்டமன்ற தொகுதிக்கு 2,387 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இதில் 2154 ஆண் வேட்பாளர்களும் 231 பெண் வேட்பாளர்களும் உள்ளனர்.

    ஆந்திராவில் உள்ள 26 மாவட்டங்களில் 46 ஆயிரத்து 389 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,438 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    தேர்தல் பணியில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 34 ஆயிரத்து 651 வாக்குவா சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கபட உள்ளது.

    ஆந்திராவில் 4 கோடியே 14, 187 வாக்காளர்கள் உள்ளனர். துணை ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ், பா.ஜ.க., பி.ஆர்.எஸ். கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 475 ஆண் வேட்பாளர்களும் 50 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 35 ஆயிரத்து 88 வாக்குச்சாவடி மையங்கள் தேர்தல் பணியில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணியமத்தப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள 13 தொகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இங்கு மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படுகிறது. தெலுங்கானாவில் 3 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள மது கடைகள் மதுபான கூடங்கள் நேற்று முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நாளை வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன

    இதேபோல் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவு
    • குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குகள் பதிவு

    பாராளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற்றது.

    அன்று உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

    குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

    ஆண்கள் 67% பேரும், பெண்கள் 64% பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25% பேரும் வாக்களித்துள்ளனர்

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 85.45 சதவீதம்

    பீகார் 59.15 சதவீதம்

    சத்தீஸ்கர் 71.98 சதவீதம்

    கோவா 76.06 சதவீதம்

    குஜராத் 60.03 சதவீதம்

    கர்நாடகா 71.84 சதவீதம்

    மத்திய பிரதேசம் 66.75 சதவீதம்

    மகாராஷ்டிரா 63.55 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.55 சதவீதம்

    மேற்கு வங்காளம் 77.53 சதவீதம்

    • 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
    • வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.

    பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.

    அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

    அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.

    அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    • பிரதமரை மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி வந்தார்.
    • விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    பாரதிய ஜனதா கட்சி பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போதைய மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மேலும் பல மாநிலங்களில் கால் பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

    அதற்கு தகுந்தாற்போல் பிரதமரை மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி வந்தார். அவர் மட்டுமின்றி பாரதிய ஜனதா தேசிய தலைவர்களும் பிரசாரத்திற்கு வந்தனர்.

    கேரளாவில் பெரும் பான்மையான தொகுதிகளை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திர சேகர், முரளீதரன், நடிகர் சுரேஷ்கோபி, மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட பிரபலங்களை களத்தில் இறக்கியது.

    இதன் காரணமாக கேரள மாநில தொகுதிகளில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. அந்த சூழலில் கேரள மாநிலத்தில் மக்களவை தேர்தலும் முடிந்துவிட்டநிலையில், தேர்தல் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

    கடந்த தேர்தலிலேயே 19 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் கூட்டணி, இந்த முறையும் அதேபோன்று பெரும் பான்மையான தொகுதிகளை கைப்பற்றி விடுவோம் என்றே கூறி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை கேரளாவில் 5 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகிறது.

    மேலும் இந்த தேர்தலுக்கு பிறகு கேரளாவில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. கேரள மாநிலத்தில் யார் சாதிக்கப்போகிறார்கள்? என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும் என்பதால் அனைவரும் அதற்காகவே காத்திருக்கிறார்கள்.

    கேரளாவில் பாரதிய ஜனதாவை காலூன்ற செய்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்து வரும் நிலையில், பிரதமர் மோடி பற்றிய சர்ச்சை வீடியோ ஒன்று தற்போது கேரளாவில் பரவி வருகிறது.

    அந்த வீடியோ பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கேரள பிரிவு பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரசின் கேரள பிரிவின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பிரதமர் மோடி பற்றி பதிவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பிரதமர் பயணிக்கும் விமானப்படை ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்கிறார் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைக்கிறது.

    இது நாட்டின் பாதுகாப்பு படைகளை அவமதிப்பதாக இருக்கிறது. இந்த வீடியோ கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே கணக்கில் இருந்து பரப்பப்பட்டது. அந்த நேரத்தில் அது போலியானது என்று நிரூபிக்கப்பட்டது.

    அதற்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக காங்கிரஸ் மீண்டும் போலி வீடியோவை பரப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யிருக்கிறார்.

    • எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
    • 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

    பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.

    ஆனால் பா.ஜனதா 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றிப்பெறாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    பிரதமர் மோடி இன்று ஒடிசா மாநிலம் கந்தமாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை தாண்டும் என்று நாடு முடிவு செய்து விட்டது. எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

    காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாது. காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தனது சொந்த நாட்டை பயமுறுத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

    அவர்கள் பாகிஸ்தானின் வெடிகுண்டு பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் நிலையை பார்த்தால் அதை எப்படி வைத்திருப்பது என்று தெரியாமல், தங்கள் வெடிகுண்டுகளை விற்க ஆட்களை தேடுகிறார்கள்.

    ஆனால் தரம் பற்றி மக்களுக்குத் தெரியும் என்பதால் யாரும் அவற்றை வாங்க விரும்பவில்லை. மும்பை தாக்குதலுக்கு காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

    26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பா.ஜனதா முடிவு கட்டியது. ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். ஒடியா மொழி, கலாச்சாரம் தெரிந்த மண்ணின் மகனோ அல்லது மகளோ ஒடிசாவில் பா.ஜனதா அரசின் முதல்வராக வருவார்.

    ஒடிசா முதல்-மந்திரியாக இருக்கும் நவீன் பட் நாயக்குக்கு சவால் விட விரும்புகிறேன். ஒடிசா மாவட்டங்கள் மற்றும் அந்தந்த தலைநகரங்களை காகிதத்தில் பார்க்காமல் அவரை எழுத சொல்லுங்கள். மாநிலத்தின் மாவட்டங்களின் பெயரை முதல்-மந்திரி சொல்ல முடியாவிட்டால், உங்களது வலி அவருக்கு எப்படி தெரியும்?.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கூட்ட மேடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பூர்ணமாசி ஜானி என்ற மூதாட்டிக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்திய மோடி, அவரது பாதங்களை தொட்டு வணங்கினார்.


    • 10 ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்று அரசு மதுபான கடையில் கொடுத்தால் மதுபாட்டில் வழங்கப்படுகிறது.
    • அரிசி கடைகளுக்கு சென்று 50 ரூபாய் நோட்டை கொடுத்தால் 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை இலவசமாக தருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற 13-ந்தேதி சட்டமன்ற மற்றும் பாராமன்றத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் ஆந்திராவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தாராளமாக வழங்கி வருகின்றனர். நேற்று மாலை முதலே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஓட்டுக்கு ரூ.3 ஆயிரமும், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ரூ.2 ஆயிரமும் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

    பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மதுப்பிரியார்களுக்கு ஒரே வரிசை எண்கள் கொண்ட 10 ரூபாய் நோட்டுகளும், பெண்களுக்கு 50 ரூபாய் நோட்டுகளை டோக்கன்களாக வீடு வீடாக விநியோகம் செய்தனர்.

    10 ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்று அரசு மதுபான கடையில் கொடுத்தால் மதுபாட்டில் வழங்கப்படுகிறது.

    அரிசி கடைகளுக்கு சென்று 50 ரூபாய் நோட்டை கொடுத்தால் 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை இலவசமாக தருகின்றனர். தேர்தல் அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க இது போன்ற நூதன செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் புதுப்பட்டினம் சாலையில் உள்ள அரிசி குடோனில் சோதனை செய்தனர். மூன்று லாரிகளில் 540 அரிசி மூட்டைகள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் காந்தி ரோட்டில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த 4000 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதிக்குட்பட்ட மாதர்ல பள்ளியில் அரசியல் கட்சியினர் அதிகாலையிலேயே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தனர்.

    பொதுமக்கள் மாறி மாறி சென்று பணம் பெற்றனர். இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்தவர்கள் தங்களிடம் தற்போது பணம் இல்லை பிறகு வந்து தருகிறோம் எனக் கூறி காரை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தல் அறிக்கையில் சொன்ன முக்கிய அறிவிப்புகளை முதல் 100 நாட்களில் நிறைவேற்ற காட்ட வேண்டும் என்பதில் பிரதமர் முனைப்புடன் உள்ளார்..
    • ஏ வகை பிரிவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கொள்கை அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    பாராளுமன்றத் தேர்தலில் பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறோம். இன்னும் மீதி கிணறு தாண்ட வேண்டியிருக்கிறது. அதற்குள் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பதில் விறுவிறுப்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட தொடங்கி இருக்கின்றன.

    3-வது கட்டத்தேர்தல் பிரசாரத்தில் இருந்து வட மாநிலங்களில் மாற்றங்கள் வந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியானபடி உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் 400 தொகுதிகள் கிடைக்காது என்று பெரும்பாலானவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். 

    என்றாலும் பிரதமர் மோடி இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் 3-வது முறையாக நிச்சயம் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஜூன் 4-ந் தேதி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் திட்டமிடத் தொடங்கியிருக்கிறார்.

    குறிப்பாக முதல் 100 நாட்களில் பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி பிரதமர் மோடி நினைத்து இருக்கிறார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை 50 முதல் 70 முக்கிய அறிவிப்புகளை முதல் 100 நாட்களில் நிறைவேற்ற காட்ட வேண்டும் என்பதில் அவர் முனைப்புடன் உள்ளார்.

    இதற்காக முதல் 100 நாள் திட்டம் என்ற தலைப்பில் மத்திய அரசின் 10 துறை செயலாளர்கள் ஒருங்கிணைந்து திட்டங்களை தயாரித்து வருகிறார்கள். அவர்கள் அந்த திட்ட அறிவிப்புகளை ஏ, பி, சி என்று 3 வகையாக பிரித்து பட்டியலிட்டுள்ளனர்.

    ஏ வகை பிரிவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கொள்கை அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

    பி வகை பிரிவில் மத்திய மந்திரிகள் மூலம் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று உள்ளன. இதில் முக்கியமான மந்திரிகளின் கொள்கை அறிவிப்புகள் இடம் பெறும்.

    சி வகை பிரிவில் சற்று நீண்டகால திட்டங்களுக்கான அறிவிப்புகள் இருக் கும். இந்த 3 வகை திட்ட அறிவிப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசின் முக்கியத்துறை அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

    • சந்திரசேகர ராவ் மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரித்து வருகிறார்.
    • பிரதமர் மோடி தெலுங்கானா மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

    தெலுங்கானா மாநிலம் நக்ரேக்கல் பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் செய்தார்.

    தெலுங்கானாவில் முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரித்து வருகிறார். இந்த தேர்தலுக்கு பிறகு அவருடைய கட்சி காணாமல் போய்விடும்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மக்களுக்காக எதையும் செய்யவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசில் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை மோடி பலவீனப்படுத்தினார். பா.ஜ.க.வின் கஜானாவை நிரப்புவதற்காக மக்களையும், நாட்டையும் கொள்ளையடித்தார்.

    மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகியோரின் அடிப்படை உரிமைகளை பறித்து அடிமைகளாக மாற்றுவார்கள். அரசியல் சட்டத்தை மாற்றி இட ஒதுக்கீட்டை அகற்றி உங்கள் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்க நினைக்கிறார்கள்.

    மோடியை வெளியேற்றி நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரம் இது.

    தெலுங்கானா மக்கள் இந்த தேர்தலில் கவனமுடன் வாக்களிக்க வேண்டும். உங்களுடைய தேர்வு சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும்.

    வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு கவலையை அளிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் முன்னின்று காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×