search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLA"

    • வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார்.
    • எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பெனுகொண்டா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கர நாராயணன்.

    இவர் நேற்று மாலை கட்டம்தண்டா பஞ்சாயத்து குட்பட்ட கல்வி தண்டா பெனுகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்து பொது கூட்டங்களில் பேசினார்.

    பின்னர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார். டெட்டனெட்டர் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு காரின் மீது குண்டு வீசிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    அங்கு வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பதும் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் மற்றும் டெட்டனேட்டர் ஆபரேட்டராக செயல்பட்டது தெரியவந்தது.

    கணேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடம் முருகேசன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    பரமக்குடி

    பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து பரமக்குடி ஒன்றியம், தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி மீனாட்சி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு பரமக் குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, தெளிச் சாத்தநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் மங்களேஸ் வரி சேதுபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் கண்ணன், கதிர் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே கிராமசபை கூட்டம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூ ரில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தங்கபாண்டியன்

    எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார். ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருடத்திற்கு 4 முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை 6 முறை யாக மாற்றியவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர். கிராமத்தின் அடிப்படை தேவை குறித்து பொது மக்கள் அளித்த கோரிக்கை கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். இதில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ராமமூர்த்தி, துணை சேர்மன் துரை கற்பகராஜ், கவுன்சிலர்கள் நவமணி, காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கடல்கனி, கிளை செயலாளர்கள் சின்னதம்பி, சீதாராமன், வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொன்னாகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இதில் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    காந்தி ஜெயந்தியை முன் னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிவக ங்கை சட்டமன்ற உறுப்பி னர் பி.ஆர்.செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் அவர் பேசும்போது "பெற் றோர்கள் தங்கள் பிள்ளை களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும். தீய வழியில் சென்று விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பெற் றோர்களுக்கு உண்டு என் றும் தற்போது பரவி வரும் நோய்களில் இருந்து கிராம மக்கள் கவனமாக பாது காத்துக் கொள்ள வேண்டும். சுய வைத்தியம் செய்து கொண்டு அலட்சியமாக இருந்து விடாமல் உரிய மருத்துவர்களை அணுகி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கூறி னார்.

    இதில் சிவகங்கை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி, பொன்னா குளம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகை சாமி, சித்தலூர் பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.
    • கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம்.

    புதுச்சேரி:

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான் குமார், ராமலிங்கம், மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், கொல்ல பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.

    அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர். அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவது இல்லை. இதனால் தொகுதி வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதனை கேட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் உறுதியளித்தார்.

    தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும் போது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.

    எனவே அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம். அதிகாரிகள் தொடர்ந்து தவறுகள் செய்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.
    • மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்காள எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் குறைவாக இருந்தது.

    மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    எனினும், முதலமைச்சரின் வருவாயில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்து இருந்தார்.

    "மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்று உயர்த்தப்படுகிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார்.
    • காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். பின்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

    பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்தார். தற்போது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம்-பாளை சாலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதில் தோட்டம் அமைத்துள்ளார். அந்த தோட்டத்தினையும், அதன் நீர்வழிபாதையையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் அங்கு சென்று பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காற்றாலை ஊழியர்கள் சுந்தர்ராஜை கீழ தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் காற்றாலை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் காற்றாலை தரப்பில் ஊழியர் ஹரி, தன்னை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
    • மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இரங்கல்.

    நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான நோக் வாங்னாவோ, அவரது 87 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒரு தீவிர பிராந்தியவாதியான நோக் வாங்னாவ் 1974 ல் அரசியலில் சேர்ந்தார். பின்னர், மோன் மாவட்டத்தில் உள்ள தபி தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் மாநிலத்திற்கு சேவை செய்தார்.

    கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இறக்கும் வரை சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.

    இந்நிலையில், திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் சிங்வாங் கொன்யாக் உட்பட ஏராளமான தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நோக் வாங்னாவோ மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.

    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கீழச்சீத்தை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப் புல்லாணி ஒன்றியம் உதய–நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டா–லின் நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் எஸ்.பி.ஜெயமுரு–கன் வரவேற்றார்.

    நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த் திக், உத்திரகோச–மங்கை ஊராட்சி மன்ற தலைவர் கருங்கம்மாள் முத்து ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன் சிலர்கள் ஆதித்தன், கார்த் திகேஸ்வரி கொத்தலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் (மேற்கு), நாகேஸ்வரன் (கிழக்கு) உட்பட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட் டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்க–ளிடம் பிடிபடாத காளை–களின் உரிமையாளர்க–ளுக் கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

    இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–களும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
    • தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்ட தொடக்க விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் கதிரவன் முன்னிலை வகித்தார்

    ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, துணத்தலைவர் பாக்கியம் செல்வம், முன்னாள் தலைவர் ஆறுமுகம் கணேசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன், மாறன், கார்த்திகா, ஞான சேகரன், வக்கீல் முருகன், மணிவேல், கேபிள் ராஜா, மனோகரன் ஆகியோர் பேசினர்.

    இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்திய பிரகாஷ், வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் திருசெந்தில், ஊத்துக்குளி ராஜாராமன், செல்வமணி, தமிழ்மணி, முருகேசன் உள்பட ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது.
    • குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    இதுதவிர 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில் காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி பெற கடுமையாக போராடினர். பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அதில் மந்திரிகளை சந்திக்க முடியவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து பேச முடியவில்லை என்றும் பரபரப்பான குற்றச் சாட்டுகளை தெரிவித்து இருந்தனர். அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த சில எம்.எல்.ஏ.க்கள் அது பா.ஜ.க.வின் சதிவேலை என்று தெரிவித்தனர். சில எம்.எல்.ஏ.க்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது கருத்து வேறுபாடுகளை களைந்து பணியாற்றுமாறும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் சிலரை மீண்டும் காங்கிரசில் இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து சிலர் வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களில் காங்கிரசை சேர்ந்த பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), எஸ்.டி.சோமசேகர் (யஸ்வந்த்பூர்) மற்றும் சிவராம் ஹெப்பர் (எல்லாபூர்) ஆகியோர் அடங்குவர்.

    இதேபோல் ஜனதாதளத்தை சேர்ந்த கே.கோபாலையா (மகாலட்சுமி லேஅவுட்), தொட்ட நாகவுட் பாட்டீல் (குஷ்டகி) ஆகிய 6 பேர் ஆபரேசன் தாமரை மூலம் பா.ஜனதாவில் இணைந்தனர். இதில் சிலர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த நிலையில் அடுத்து ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அவர்கள் மீண்டும் காங்கிரசில் இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள நிலையில் பா.ஜனதாவிலிருந்து வந்தால் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைப்பது மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் பா.ஜனதாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் காங்கிரசில் இணைந்தால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசில் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். இதேபோல் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரியன் கார்கே கூறும்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் சேர விரும்பினால் நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்களின் சேவைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

    2019-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்திலிருந்து விலகி சென்றவர்களை அதேபாணியில் காங்கிரஸ் மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணையலாமா, வேண்டாமா என்ற இரட்டை நிலைப்பாட்டில இருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இந்த நிலையில் இவரது மருமகள் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த மனோலியா (24) என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் தன்னை தனது கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×