search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister VijayaBaskar"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #ministervijayabaskar #gajacyclone #rain

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக புயல் கரையை கடக்க கூடிய அதிகாலையில் 130 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசிய காரணத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் பெருமளவு சேதத்தை திடீரென்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக 10,000 த்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 33 கி.வாட் மின்பாதை, கிராமங்கள் உள்ளிட்ட அநேக இடங்களில் சாய்ந்துள்ளது. மரங்களும் மின்கம்பத்தில் சாய்ந்த காரணத்தினால் பெரும்பாலான பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்டத் துறைகள் மின்சாரத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மின் இணைப்புகளை துண்டித்த காரணத்தினால் மின்சாரத்தினால் எவ்வித உயிர் இழப்பும் இல்லாத நிலையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    பொது மக்களுக்கு மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதே மாவட்ட நிர்வாகத்தின் முதல் நோக்கமாகும். எனவே அதற்குரிய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அறிவுரையின் படி மின்சாரத்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசி ஏற்கனவே இங்குள்ள மின்சாரப் பணியாளர்களுடன் வெளி மாவட்டங்களிலிருந்து 500 பணியாளர்களும், 33 சிறப்பு அலுவலர்களும் வருகை தர உள்ளனர். இதன் மூலம் இப்பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சேத பாதிப்புகள் கணக்கிடப்பட்டு வருவதுடன் சேதமடைந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் போன்றவை கணக்கெடுக்க வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

    புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர். #GajaCyclone #Gaja #Vijayabaskar
    தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘கஜா’ புயல் கரை கடந்ததையொட்டி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் இருந்தது.



    புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. வெளிமாவட்டங்களை சேர்ந்த 500 பணியாளர்களை கொண்டு சீரமைப்பு மற்றும் மின்சார பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். #GajaCyclone #Gaja #Vijayabaskar
    மு.க.ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது ஏனென்றால் அவருக்கு கட்டம் சரியில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். #ministervijayabaskar #MKStalin
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற அ.தி.மு.க.47-ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க தொண்டர் ஒருவரால் கூட ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கூற முடியாது. ஏனென்றால் அவருக்கு கட்டம் சரியில்லை,  எப்போது தேர்தல் வந்தாலும்  பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். எந்த நடிகராவது, எந்த  இயக்குநராவது தன் வீட்டில் வேலை செய்யும் பணியாளர் மகளுக்கு திருமணம் செய்ய தாலி வாங்கி கொடுத்துள்ளாரா அல்லது அவரது பிள்ளைகளுக்கு படிக்க 100 ரூபாய்க்கு கால்குலேட்டர் வாங்கி கொடுத்துள்ளாரா? அ.தி.மு.க பற்றி தரம் தாழ்ந்து பேசுபவர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி அ.தி.மு.க தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். யாரும்  சோடை கிடையாது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, கந்தர் வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட ஏற்பாடுகளை நகர செயலாளர் தங்கப்பன், ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்  சேகர், கொப்பனாபட்டி ஊராட்சி மன்ற தலைவர்  மாரிமுத்து ஆகியோர்  செய்திருந்தனர். #ministervijayabaskar #MKStalin
    உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 70 சதவீத மகப்பேறு அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதன்மையாக விளங்குகிறது. இதேபோன்று மகப்பேறு இறப்பு சதவீதம் என்பது 5 மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்திற்கு 62 ஆக இருந்தது. ஆனால் அது தற்போது 51 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே குறைந்த இறப்பு சதவீதம் ஆகும்.

    தமிழக சுகாதாரத்துறை சார்பில் விபத்தினால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கான நிலைப்படுத்தும் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. இதை விரிவுபடுத்தும் விதமாக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகம் விபத்து நடக்கும் பகுதிகளில் இத்தகைய நிலைப்படுத்தும் மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

    அனைத்து கிராமங்களிலும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை அனைத்து துறையுடன் சேர்ந்து முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. கிராமப்புற மக்கள் காய்ச்சல் என்று வந்தவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அல்லது படுக்கை வசதி கொண்ட தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதற்கான சான்றிதழை விரைவில் தமிழக முதல்வர் வெளியிடுவார்.


    தமிழக சுகாதாரத்துறையை தொடர்ந்து பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு டிசம்பர் 9-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட்டு கவுன்சிலிங் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் மருத்துவர் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
    தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #Vijayabaskar #Swineflu #Dengue
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பலியாகி உள்ளனர். காய்ச்சல்கள் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.



    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் செவிலியர்களை நியமித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். #Vijayabaskar #Swineflu #Dengue
    விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #AIIMS #TNMinister #Vijayabaskar
    சென்னை:

    சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.


    எனவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் ஏற்படாது. எம்ய்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்தவித மாற்றமும் இல்லை. மேலும், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AIIMS #TNMinister #Vijayabaskar
    டெங்கு கொசுக்கள் ஒரு நாளைக்கு 1,500 முட்டையிடும். அதனை சாதாரணமாக நினைக்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #Dengue
    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் தொழிலாளிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் விழா மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் இன்று காலை கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தொழிலாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோயம்பேடு மார்கெட் மேனேஜிங் கமிட்டி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    அடுத்த கட்டமாக அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிக்க இருக்கிறோம். டெங்கு காய்ச்சலுக்கு அனைத்து அரசு மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். காய்ச்சலால் மரணம் என்பது முக்கியமாக தடுக்கப்பட வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் வந்தால் 5-ல் இருந்து 7 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து 1,200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.



    ஒரு கொசு 21 நாள் உயிர் வாழும். கொசு ஒரு நாளைக்கு 1,500 முட்டையிடும். அதனால் அதனை சாதாரணமாக நினைக்கக்கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள காய்கறி சங்கங்கள் அல்லது கூட்டமைப்பு எந்த உதவியாக இருந்தாலும் தெரிவிக்கலாம். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு 5 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய பெருமை வணிகர் சங்கங்களையே சாரும். காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். காய்ச்சலால் ஒருவர் இறப்பதை அரசு அனுமதிக்காது.

    கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்கிறோம். மருத்துவமனை அமைக்க இடம் தாருங்கள். மருத்துவமனையை அமைத்து தருகிறோம். அதுவரை தினமும் 2 மருத்துவ முகாம் அமைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். #MinisterVijayabaskar #Dengue

    சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #DengueFever
    சென்னை:

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடந்தது.

    அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினர், கட்டுமான பணிகள் சங்கத்தினர், உணவக, திருமண மண்டப, திரையரங்கு உரிமையாளர்கள், வணிகர்கள், தனியார் பள்ளி, கல்லூரி தாளாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துரைத்தார். கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும், ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை முழுமையாக தர வேண்டும் என வலியுறுத்தினார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கவும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.



    இந்த குழுக்கள் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிக்கு சென்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். டெங்கு மற்றும் அனைத்து வகையான காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவி, ரத்த கூறுகள், ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பு உள்ளன.

    டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினம் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலின் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு செயல்பட்டு வருகிறது.

    பொது இடங்களுக்கு சென்று வருபவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெட்டேரி அருகே ஒரு தனியார் மண்டபத்தில் மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மழை வெள்ள பாதுகாப்பு கண்காணிப்பாளர் டாக்டர் சந்தோஷ்பாபு கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.

    வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #MinisterVijayabaskar #DengueFever

    இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
    தஞ்சாவூர்:

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக நேற்று தஞ்சைக்கு வந்தார்.

    தஞ்சையில் இன்று நடைபெறும் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் வரும் போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் நேற்று மாலை பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அதன் பின் அதிர்‌ஷடத்தில் விபத்து போல் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார்.

    பொதுப் பணித்துறையையும், நெடுஞ்சாலைத்துறைகளையும் தன்வசம் வைத்து கொண்டு இதன் மூலம் ரூ.3ஆயிரம் கோடி வரை அவருடைய உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல் செய்துள்ளார்.

    முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்- அமைச்சர் மட்டுமின்றி அமைச்சர்களும் ஊழலில் திளைத்து வருகின்றனர். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஐயபாஸ்கர் ஆகியோர் மீது சி.பி.ஐ. விசாரணை வந்து கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா இறந்த பிறகு அவர் செய்த ஊழலை விட எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது.

    இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான். எனவே இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை தான் மாற்று கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் விரும்புகின்றனர். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 62 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பரிசோதனை செய்ததில் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #DengueFever
    சென்னை:

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதிப்பட்டுள்ளது. அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ரிஸ்வான் காய்ச்சலால் உயிரிழந்தான்.

    இந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 62 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதில் பரிசோதனை செய்ததில் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் 20 முதல் 40 வயது உடையவர்கள் ஆவார்கள்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த ஆண்டு அரசு எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனாலும் ஒருசில நாட்களில் காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

    சென்னையில் இதுவரை 62 பேர் அனுமதிக்கப்பட்டதில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் கொஞ்சம் அதிகமாகி உள்ளது. அதை அரசு மறைக்கவில்லை.

    காய்ச்சலை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம். யாராக இருந்தாலும் காய்ச்சல் வந்த 3-வது நாளில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். 5-வது நாளில் டெங்கு பரிசோதனை செய்து செய்து கொள்ள வேண்டும்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த 20 லட்சம் டேமி புளூ மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது.

    டெங்கு அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 100 சதவீதம் எந்தவித உயிரிழப்பும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்து நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

    பாளையங்கோட்டையில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் வந்ததும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தோம்.

    சென்னை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 50 படுக்கை கொண்ட ஆண்கள் வார்டும், 30 படுக்கைகள் கொண்ட பெண்கள் வார்டும் 1 மாதத்துக்கு முன்பே உருவாக்கப்பட்டு பிரத்யேக டாக்டர்கள் அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே காய்ச்சல் பாதிப்புடன் வந்துள்ளனர்.

    டெங்குக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆண், பெண்களுக்கு தனித்தனி வார்டுகள் தயாராக உள்ளது. போதுமான மருந்துகளும் உள்ளன. டெங்கு பாதிப்பை தடுக்க சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    பெற்றோர் தங்களது குழந்தைகளை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு மழை காலத்தில் உடல் முழுவதும் மறைக்கும்படி ஆடை அணிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சாலையோரத்தில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களான தேங்காய் மட்டை, டயர் போன்றவற்றை அகற்றி வருகிறார்கள்.

    இதே போல் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, “மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பை தடுக்க 21 ஆயிரம் ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது.

    அதை கட்டுப்பாட்டில் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தெருவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வீடு வீடாக சென்று தேவையற்ற பொருட்களை அகற்றி வருகிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு 22 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 2,200 பேர் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீவிர நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துப்பட்டு இருப்பதற்கு இதுவே உதாரணம்” என்றார். #DengueFever
    பெசன்ட் நகரில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
    சென்னை:

    பெசன்ட் நகரில் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சுந்தரம் மெடிக்கல் பவுண்டே‌ஷன்-கேன் ஸ்டாப் சார்பில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பலூன்களை பறக்க விட்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, இரத்த தான முகாம், மருத்துவ முகாம், இயற்கை உணவு முகாம் ஆகியவற்றை பார்வையிட்டு, மாபெரும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபேரணியை துவக்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மட்டுமல்லாமல் பொது மக்கள் தாமாகவே முன்வந்து தொற்றா நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து கொள்கின்றனர். 2012 ஜூலை மாதம் முதல் இதுவரை 2.26 கோடி பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் செய்து கொண்டதில் 2.34 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
    ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #MinisterVijayaBhaskar
    திருச்சி:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை தனியாக சந்தித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்றிவிட்டு தன்னை முதல்வராக்க ஆதரவு கொடுத்ததாகவும் டிடிவி தினகரன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டிடிவி தினகரனை சந்தித்ததை ஓ.பன்னீர்செல்வமும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ‘முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னிடம் தினகரன் பேசினார். அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு பின்னர்தான், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன’ என ஓபிஎஸ் விளக்கம் அளித்தார்.


    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார் தினகரன். இன்று திருச்சியில் பேட்டி அளித்த அவர், ‘ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நடைபயிற்சியின்போது என்னை சந்தித்து பேசினார்’ என்றார். ஓபிஎஸ் உடனான சந்திப்பு போன்று இந்த விவகாரமும் விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #TTVDhinakaran #MinisterVijayaBhaskar 
    ×