search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister Udhayakumar"

    சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பதிலடி கொடுப்போம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Udhayakumar #Sarkar
    பேரையூர்:

    திருமங்கலம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வியாபார நோக்கத்திற்காக இன்று அம்மாவின் திட்டங்களையும் உழைப்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக சர்கார் படத்தில் சில காட்சிகள் வந்துள்ளது.

    இது ஒட்டுமொத்த உலக தமிழினத்தின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பது நமக்கெல்லாம் வேதனையாக உள்ளது.

    வியாபார நோக்கத்திற்காகவும் லாப நோக்கத்திற்காகவும் போட்ட முதலீட்டை எடுப்பதற்காக, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    வியாபார, அரசியல் நோக்கத்தோடு அந்த காட்சியை வடிவமைத்தார்கள் என்று சொன்னால் அதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

    இதனை உடனடியாக அவர்களே நீக்க வேண்டும். அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் அதனை முதலில் கண்டிப்போம், எச்சரிப்போம்.

    தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பேரவை தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது அவரது புகழை காப்போம்.


    அம்மாவின் திட்டங்களைப் பற்றி விவாதிக்க தயாராக உள்ளோம். ஐக்கிய நாடு சபையில் பாராட்டுப்பெற்ற திட்டங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவது என்பது அம்மா புகழை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்துவதாகும்.

    இதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது. அந்தக் காட்சி நீக்கப்பட வேண்டும்.

    இல்லையென்றால் ஜெயலலிதா பேரவை சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #Sarkar
    தனது சுய லாபத்துக்காக 18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த 18 பேரும் தங்கள் பதவியை தகுதி இழப்பு செய்த பின்னர் படாதபாடு பட்டுவிட்டார்கள்.

    அம்மாவின் அரசை காப்பாற்றுவதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை குற்றாலத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.

    பதவி ஆசையை காட்டி பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அம்மாவின் அரசை காப்பாற்ற குற்றாலத்தில் அடைத்து வைத்தாலும், துன்பத்தில் அடைத்தாலும் வெளியே வருவார்கள்.

    முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று நாங்கள் தெளிவாக கூறி வருகிறோம். எனவே தனது உயிரை தந்து அம்மா இந்த ஆட்சியை ஏற்படுத்தினார்.

    அது போல உயிரை கொடுத்தாவது இந்த ஆட்சிக்கு துணை நிற்க வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த தொகுதிகளில் மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தான் மக்களை மறந்து விட்டார்கள்.

    தினகரன் தனது சொந்த சுய லாபத்துக்காக இதுவரை அரசியலில் சீரழிவு கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார். தான் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அம்மாவின் அலங்கோலமான வீடியோவை வெளியிட்டார். அது போலத்தான் ஒருவரை சந்தித்து பேசுவதை கொச்சைப்படுத்தினார்.

    இன்று ஆடியோ சி.டி. வெளியிட்டு அமைச்சருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அ.தி.மு.க. அரசை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

    இவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே திருப்பரங்குன்றத்தில் நாளை (24-ந் தேதி) 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக திருச்சி விமானநிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். #NorthEastMonsoon #ADMK #TNMinister #Udhayakumar
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இதுகுறித்து 32 வருவாய் மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    அந்த இடங்களில் அதிகப்படியான மழையோ, வெள்ளமோ ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    முதல்வர் தலைமையில் நான்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக ‘ரெட் அலர்ட்’ போன்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அது தேவையில்லை என்றால் விலக்கி கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #ADMK #TNMinister #Udhayakumar
    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் யாருக்கும் இங்கு காய்ச்சல் வரவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். #MinisterUdhayakumar #VijayPolitics
    சென்னை:

    நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த தகவலை சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சூசகமாக தெரிவித்தார். அவரது பேச்சுக்கு சிலர் ஆதரவு அளித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். அதன்பின்னர் சமீபத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுவதாக கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால் அச்சத்தில் யாருக்கும் காய்ச்சல் ஒன்றும் வரவில்லை’ என்றார்.


    மேலும் குடிநீர் பிரச்சனை குறித்து கமல் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், ‘ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான விஷன்-2023 திட்டத்தை பற்றி முழுமையாக படித்திருந்தால் கமல் இப்படி உளறமாட்டார்’ என்றார்.

    ‘சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிடையாது. விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பினால் சரி’ என ஏற்கனவே உதயகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது. #MinisterUdhayakumar #VijayPolitics
    தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலைமான் உள்ளிட்ட 9 கிராமங்களில் 418 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றத்தை இன்றைக்கு அரசியலாக்கி தினகரன் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். அவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை மறுக்கவில்லை.

    எப்போதோ நடந்த நிகழ்ச்சியை இப்போது கூறி அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.விற்கு உள்ள செல்வாக்கை நினைத்து தினகரன் இப்போது குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தினகரன் உத்தமபுத்திரன் வே‌ஷம் போடுவதை தொண்டர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தினகரனின் பழைய முயற்சி புதிய வடிவத்தில் வெளிவந்துள்ளது. குட்டையை- குழப்பி திருப்பரங்குன்றத்தில் மீன் பிடித்து விடலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது முயற்சி எடுபடாது.

    தினகரனின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பை தொண்டர்கள் முறியடிப்பார்கள். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன் உடன் இருந்தனர். #ADMK #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    தங்கள் மீது ஊழல் புகார் கூறும் மு.க.ஸ்டாலின் குடும்ப சொத்து விவரங்களை வெளியிட தயாரா? என்று ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார். #DMK #MKStalin #ADMK #TNMinister #Udhayakumar
    சென்னை:

    ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘‘ஊழலின் ஊற்றுக்கண்’’ என்று உலகப் புகழ்பெற்ற தி.மு.க.வும், அதன் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இந்தியாவிலேயே ஒரு மாநில அரசு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கலைக்கப்பட்டது என்றால் அது, 1976ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட தி.மு.க. அரசு தான் என்பது வரலாறு அல்லவா?

    சற்றும் நாகரீகம் இல்லாத சொற்களால் அரசையும், அமைச்சர்களையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு, அவர் அளக்கும் படியினாலேயே திருப்பி அளக்கப்படும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    அ.தி.மு.க. அரசின் மீது தி.மு.க.வினர் அடிப்படையற்ற அவதூறு குற்றச்சாட்டுகளையும், ஊழல் புகார்களையும் அள்ளி வீசுவது என்பது புதியதே அல்ல. அ.தி.மு.க.வின் தொடர் வெற்றியால் பொசுங்கிப் போய்க் கிடக்கும் அவர்களது குறுகிய மனது, 1977 முதல் இப்படி வசை பாடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் மனதில் எழுகின்ற சில கேள்விகளை மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வைக்கிறேன். கட்டாயமாக அவர் பதில் சொல்வார் என்று நம்புகிறேன்.


    உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர் பெயரிலும் மற்றும் உங்களுக்காக, உங்கள் பணத்தைக்கொண்டு உங்கள் பினாமிகளாகத் தொழில் நடத்தும் ஒவ்வொருவரின் பெயரிலும் உள்ள அசையும் சொத்துக்களின் முழு விவரம், அசையா சொத்துக்களின் முழு விவரம், வங்கி வைப்பீடுகள், பங்கு முதலீடுகள் முதலான விபரங்களை எதுவும் மறைக்காமல் தெளிவாக, ஒவ்வொன்றாக, தனித்தனியாக, மழுப்பலின்றி பகிரங்கமாகச் சொல்ல முடியுமா? முடியாதா? என்பது தான் கடந்த பல ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் குடும்பத்தை நோக்கிய தமிழக மக்களின் கேள்வி.

    புரட்சித் தலைவி அம்மா 25.7.2006 அன்று மு.க.ஸ்டாலினின் தகப்பனாருக்கு எழுப்பிய கேள்விகளை இப்பொழுது மு.க.ஸ்டாலினை நோக்கி எழுப்ப விரும்புகிறேன். ‘‘கருணாநிதி மற்றும் அவரது மகன்கள், மகள்கள், மனைவி, துணைவி, மருமகன்கள், மருமகள்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் பற்றி நேருக்கு நேர் கேள்வி கேட்க என் சார்பில் நான் ஒரு குழுவை நியமிக்கின்றேன். பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் முன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களால் முழு விவரத்துடன் பதில் சொல்ல முடியுமா? முடியாதா? வீண் ஜம்பம், வீண் சவடால் வார்த்தைகள் தேவையில்லை. நேரடி பதில் தேவை. எந்தத் தேதி உங்களுக்கு வசதிப்படும் என்று சொல்லத் தயாரா? அதனை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நான் ஏற்பாடு செய்கின்றேன். நீங்கள் தயாரா?’’ அம்மா எழுப்பிய இந்தக் கேள்விகளுக்கு கடைசிவரை பதில் இல்லை. மு.க.ஸ்டாலினிடம் இருந்தும் இந்த வினாக்களுக்கான பதில் வரப்போவதில்லை என்பது ஊரறிந்த உண்மை.

    பொறுப்பற்ற அவதூறு பேச்சுக்களை நிறுத்திக் கொண்டு மு.க.ஸ்டாலின் பண்பட்ட அரசியல் பணிகளை மேற்கொள்வது அவசியம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #ADMK #TNMinister #Udhayakumar
    ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.
    மதுரை:

    இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது எல்லாம் மக்கள் விரோத ஆட்சி நடத்துவது தி.மு.க. தமிழகத்தை சூறையாடிய இந்த கட்சியை மக்களும் புறக்கணித்து எம்.ஜி.ஆரை முதல்வராக்கினார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிளுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் எம்.ஜி.ஆர்.

    ஆனால் கருணாநிதி விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தார். இறுதிக்கட்ட போரில் உண்ணாவிரத நாடகம் நடத்தி பல ஆயிரம் அப்பாவி மக்கள், குழந்தைகள் படுகொலைக்கு காரணமாக இருந்த கட்சி தி.மு.க.

    இப்போது உத்தமர் வேடம் போடுகிறார்கள். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தளபதியாக இருக்கிறார். அவர் அ.தி.மு.க. அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார். புலியாக இருந்த கருணாநிதியாலேயே முடியவில்லை. பூனையாக இருக்கும் ஸ்டாலினால் அ.திமு.க.வை ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழல் செய்து ஆசியாவில் முதல் பணக்காரர் இடத்தை பிடித்தது யார்? என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. யார் ஊழல்வாதி என்று நிரூபிக்க ஒரே மேடையில் விவாதிக்க தயார்.

    எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தினகரன் எங்களுக்கு எதிரி கிடையாது. இதனை வருகிற இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் தி.மு.க.-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தில் அப்பாவி குழந்தைகள் கூட இலங்கையில் கொல்லப்பட்டனர்.

    அப்பாவி தமிழர்கள் கொலைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு முழு உதவி செய்தது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.

    எனவே தான் போர் குற்றவாளிகளாக நிறுத்தி இந்த கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

    அ.தி.மு.க. அரசை வீழ்த்திவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் கூறும் குற்றங்களுக்கு எந்த முகாந்தரமும் இருக்கிறதா? என்றால் இல்லை.

    தமிழக மக்களை ஏமாற்றி பலகோடி சொத்துக்களை குவித்தது யார்? என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே உத்தமர் வேடம் போடுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிப்பே கிடையாது.

    இதற்கு ஒரு வாய்ப்பாக திருப்பரங்குன்றம் மக்கள் விரைவில் தி.மு.க.வுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. பேசியதாவது:-

    ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.

    தி.மு.க. வீழ்கிற கட்சி. இனி அது ஒருபோதும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாது. கட்சி தொண்டர்கள் எல்லாம் முதல்வராகி விட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அது போல நம்மை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய ஒருவர் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றார். இதனால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

    எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் நிலைமை எப்படி முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அது போல தான் புதிதாக கட்சி தொடங்கியவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரிய புள்ளான், நீதிபதி, மாணிக்கம், கோபால கிருஷ்ணன் எம்.பி., திரவியம், எம்.எஸ்.பாண்டியன், சாலைமுத்து, வெற்றிவேல், பரவை ராஜா, சோலைராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், நிர்வாகிகள் மாரிச்சாமி, கருப்புசாமி, கே.வி.கே. கண்ணன், பிரிட்டோ முத்துவேல், ஏ.பி.பாலசுப்பிரமணி, முத்துக்குமார், முனியாண்டி, முத்து ராமலிங்கம், கலைச் செல்வம், அபுதாகீர், ஐ.பி. எஸ்.பாலமுருகன், திருநகர் குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பரங்குன்றம் தொகுதியில் எதிரிகளை விட உதிரிகளால் தான் நமக்கு பிரச்சனை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் மாநகராட்சி காலனி அருகே தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பகுதி கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் முத்துராம லிங்கம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து ஆகியோர் கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    தேர்தல் பணியிலே கவனமாக கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும், அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கி கூற வேண்டும்.

    சுவர் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகள் கிடையாது. எனவே அரசின் சாதனைகளை விளம்பரம் செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அவனியாபுரம் பகுதியில் தான் அ.தி.மு.க.விற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

    சட்டமன்ற பொது தேர்தல் நடந்தபோது 22ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீனிவேல் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஏ.கே. போஸ். 43 ஆயிரம் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.

    இதே போல் வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற பூத் கமிட்டிக்கு 200 பேருக்கு, 6 பேர் தேர்ந்தெடுத்து அந்த பகுதியிலேயே காலை, மாலை என வாக்காளர்களை சந்திக்க வேண்டும். நமக்கு எதிரிகள் கூட பிரச்சனை இல்லை. நம்மிடமிருந்து பிரிந்த உதிரிகள் தான் பிரச்சனை, அவர்களை பற்றி கவலை வேண்டாம். அவர்கள் தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. வருபவர்கள் தேர்தலுக்கு முன்பு வாருங்கள் ஏற்றுக்கொள்வோம்.

    தேர்தலுக்கு பின் தோல்வியுற்று வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

    கூட்டத்தில் எம்.எஸ். பாண்டியன், சரவணன், மாணிக்கம், பெரிய புள்ளான், இளைஞரணி மாவட்டச் செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், நிர்வாகிகள் முத்துக்குமார், வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    மருது சகோதரர்களைப்போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #Udhayakumar
    திசையன்விளை:

    திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைத்திட உத்தரவிட்ட முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திசையன்விளை நேரு திடலில் நேற்று இரவு நடந்தது.

    அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கினார். இன்பதுரை எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது திசையன் விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வருவாய் கிராமங்கள் தேவையான அளவு இல்லாத நிலையில் மக்களுக்காக திட்டம் திட்டத்திற்காக மக்கள் அல்ல என்ற அடிப்படையில் தனி தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை புதிதாக 27 வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது சரித்திர சாதனையாகும். மகத்தான மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.


    அதற்காக மருது சகோதரர்களைப்போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். 1½ கோடி தொண்டர்களை கொண்ட இந்திய அளவில் 3-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. அதை கலைக்க நினைப்பவர்கள் விரைவில் கலைந்து போவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #ADMK #Udhayakumar #EdappadiPalaniswami #OPanneerSelvam
    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிரிகளுடன் சேர்த்து உதிரியையும் வெல்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakumar
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளத்தில் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    சென்னை ஆர்.கே. நகரில் நாங்கள் அசந்ததினால் தினகரன் வெற்றி பெற்று வாய் சவடால் பேசிக் கொண்டிருக்கிறார். புலியை பார்த்து பூனை சூடு போட்டக் கதையாக அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா நடத்தியதைபோல், நீங்களும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கொண்டாடினீர்கள், ஏன் அதன் பின் கொண்டாடவில்லை.

    ஆர்.கே. நகர் தொகுதி வேறு, திருப்பரங்குன்றம் வேறு. அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறீர்கள். உங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாக்கள் மன்னிக்காது.

    அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள், அழிந்து போனது தான் வரலாறு. அ.தி.மு.க. சவுக்கு மரம் போல் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வளைந்தாலும் நெட் லிங்க மரம் போன்று உயர்ந்து நிற்கும் எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது. தொட்டுப் பார்க்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிரியோடு உதிரியையும் வெல்வோம் .

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #Udhayakumar
    தங்கத்தமிழ்செல்வன் சவாலை ஏற்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில் அ.தி.மு.க.வினர் தற்போதே தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும். அதற்காக நிர்வாகிகள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கடந்த முறை பெற்ற வாக்கைவிட கூடுதல் வாக்குகளை நாம்பெற வேண்டும் என்றார்.

    அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த ஏ.கே.போஸ் சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். ஆனாலும் மக்கள் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தந்தார்கள். இப்போது அம்மா நம்மோடு இல்லை என்றாலும் விண்ணில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டிருக்கிறார். அவரது ஆசியால் அ.தி.மு.க. மீண்டும் திருப்பரங்குன்றத்தில் வெற்றி வாகைசூடும்.

    நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சகோதரர்கள் எப்படியாவது திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆர்.கே.நகரில் அசந்ததுபோல திருப்பரங்குன்றத்தில் அசரமாட்டோம்.


    தங்கத்தமிழ்செல்வன் 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை பார்த்து சவால் விடுகிறார். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நாம் (அ.தி.மு.க. வினர்) அனைவரும் அவர்கள் பக்கம் வர தயாரா? என கேட்கிறார். மேலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டால் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடுவதாகவும் கூறுகிறார். அவர் இருக்கும் இடம் அப்படி. அவர் நம்மை பார்த்து சவால் விடவில்லை என்றால் அவர் அங்கே இருக்க முடியாது.

    தங்கத்தமிழ்செல்வனின் சவாலை நாங்களும் ஏற்கிறோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறப்போவது உறுதி. எனவே அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு இங்கே வந்து சேருவதைவிட தேர்தலுக்கு முன்பே தங்கத்தமிழ்செல்வன் போன்றவர்கள் வந்து சேர்ந்து விட்டால் அவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும்.

    இந்த இயக்கம் ஏழை- எளிய மக்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கம்.

    இந்த இயக்கத்தை எவராலும் வீழ்த்தமுடியாது. அப்படி வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள். இதுதான் வரலாறு.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Udhayakumar #ThangaTamilselvan
    கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #MinisterUdhayakumar

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சிறுகுறு வட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாவட்ட கல்வி அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் அம்மா, மாணவ-மாணவிகள் முன்னேற்றத்திற்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இலவச சைக்கிள், மடிக் கணினி உள்பட 14 வகையான உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

    அவரது ஆட்சியில் கல்விக்காக ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது படிப்படியாக உயர்ந்து அம்மா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்த ஆண்டு (2018-2019) ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அரசின் திட்டங்கள் சலுகைககளை மாணவ- மாணவிகள் உரியமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவ சமுதாயம் நாட்டின் வருங்கால தூண்கள். நாட்டிற்கும், வீட்டிற்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க அவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலைராஜா, நீதிபதி எம்.எல்.ஏ., பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×