search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirupparankundram constituency"

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் நாள் தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆறுமுகம், பூவநாதன், நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நடந்த இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.

    சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

    மாலை 4 மணிக்கு தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் பனையூர், சிந்தாமணி, வில்லாபுரம், ஹவுசிங்போர்டு காலனியில் பேசுவார். அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுவார் என்று சக்திவேல் கூறினார்.
    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். #TNByPoll #SathyaPrathaSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய தேர்தல் கமி‌ஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்துவோம்.

    அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அதில் தற்போது தேர்தல் நடத்த இயலாது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து விட்டது. அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி உள்ளோம்.

    தேர்தல் வேட்புமனு பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்களது பேச்சில் ஏதாவது விதிமீறல் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.



    தேர்தல் விதிமீறல் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ரூ.1500 பணம் கிடைக்கும் என்று பேசியதாக தி.மு.க. கொடுத்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் இதுவரை ரூ. 30 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.45 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNByPoll #SathyaPrathaSahoo
    திருப்பரங்குன்றம் தொகுதியில் எதிரிகளை விட உதிரிகளால் தான் நமக்கு பிரச்சனை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் மாநகராட்சி காலனி அருகே தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பகுதி கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் முத்துராம லிங்கம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து ஆகியோர் கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

    தேர்தல் பணியிலே கவனமாக கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும், அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கி கூற வேண்டும்.

    சுவர் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகள் கிடையாது. எனவே அரசின் சாதனைகளை விளம்பரம் செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அவனியாபுரம் பகுதியில் தான் அ.தி.மு.க.விற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

    சட்டமன்ற பொது தேர்தல் நடந்தபோது 22ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீனிவேல் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஏ.கே. போஸ். 43 ஆயிரம் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.

    இதே போல் வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற பூத் கமிட்டிக்கு 200 பேருக்கு, 6 பேர் தேர்ந்தெடுத்து அந்த பகுதியிலேயே காலை, மாலை என வாக்காளர்களை சந்திக்க வேண்டும். நமக்கு எதிரிகள் கூட பிரச்சனை இல்லை. நம்மிடமிருந்து பிரிந்த உதிரிகள் தான் பிரச்சனை, அவர்களை பற்றி கவலை வேண்டாம். அவர்கள் தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. வருபவர்கள் தேர்தலுக்கு முன்பு வாருங்கள் ஏற்றுக்கொள்வோம்.

    தேர்தலுக்கு பின் தோல்வியுற்று வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

    கூட்டத்தில் எம்.எஸ். பாண்டியன், சரவணன், மாணிக்கம், பெரிய புள்ளான், இளைஞரணி மாவட்டச் செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், நிர்வாகிகள் முத்துக்குமார், வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெறும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    அவனியாபுரம்:

    மதுரை அவனியாபுரம் 60-வது வார்டில் தினகரன் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    பகுதி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் மகேந்திரன், ஜெயபால், இளைஞரணி துணைச் செயலாளர் ஜோதிராமலிங்கம், வார்டு செயலாளர் வழிவிட்டான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தங்கதமிழ் செல்வன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெறுவோம். தற்போது எங்கள் கட்சிக்கு ஒருகோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மாதத்தில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்போம்.

    தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கு பங்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    ×