search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்த காட்சி.
    X
    திருப்பரங்குன்றத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்த காட்சி.

    திருப்பரங்குன்றத்தில் ஒரே மேடையில் வாக்கு சேகரித்த 6 சுயேட்சை வேட்பாளர்கள்

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் நாள் தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆறுமுகம், பூவநாதன், நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நடந்த இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.

    சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×