என் மலர்

  நீங்கள் தேடியது "TN Assembly by polls"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
  திருப்பரங்குன்றம்:

  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

  இதையொட்டி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

  முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் நாள் தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆறுமுகம், பூவநாதன், நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தனர்.

  திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நடந்த இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.

  சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது அப்பகுதி வாக்காளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சூலூர் தொகுதிக்குட்பட்ட சின்னியம் பாளையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
  சூலூர்:

  சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

  இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். சூலூர் தொகுதியில் அவர் ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார்.

  இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் 2-வது கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு கோவை வந்தார். இங்குள்ள ஓட்டலில் தங்கி உள்ளார்.

  இன்று மாலை 5மணிக்கு அவர் சூலூர் தொகுதிக்குட்பட்ட சின்னியம் பாளையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 5.45 மணிக்கு முத்துகவுண்டன் புதூர், 6.45-க்கு வாகராயம் பாளையம், இரவு 7.15 மணிக்கு கிட்டாம் பாளையம் நால் ரோடு, 8 மணிக்கு கருமத்தம்பட்டி (சோமனூர் பவர் அவுஸ்) 8.30 மணிக்கு சாமளாபுரம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார். இரவு 9.20 மணிக்கு சூலூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார் என்று அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.
  கரூர்:

  அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி தொகுதியில் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் க.பரமத்தி தென்னிலை பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் மகளிருக்கு வேலை, நகைக்கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதேபோன்று ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் போன்ற காங்கிரசின் வாக்குறுதிகளும் மக்களிடம் அமோக வரவேற்பினை பெற்றன.

  அதனால் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி பிரதமராவார். தமிழகத்தில் நடந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், வருகிற 19-ந்தேதி நடைபெறும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும். தமிழகத்தின் முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார். அவர் பதவி ஏற்ற உடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். அரவக்குறிச்சியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும். இது எப்படி நிறைவேற்ற முடியும் என ஆளுங்கட்சியினர் கேட்கிறார்கள். வயிற்றெரிச்சலால் ஆளுங்கட்சியினர் கேட்கிறார்கள். என் வாழ்நாளில் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பிரசாரத்தில் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNAssemblyByPolls #SellurRaju
  அவனியாபுரம்:

  மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டி ஆரம்ப கால அடிப்படை தொண்டர் ஆவார். அவரது பணியை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

  அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

  சட்டமன்ற இடைத்தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடும். அதுகுறித்து எங்களுக்கு பயமில்லை. மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். மக்களுக்கான தேவையை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.


  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுரை புறநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் கண்மாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

  மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

  திருப்பரங்குன்றம் தொகுதியில் தனி கவனம் செலுத்தி அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்த தொகுதியில்தான் வரவுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெற வைப்பார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார். #TNAssemblyByPolls #SellurRaju
  ×