search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "minister sellur raju"

  நடிகர் கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு கலைச்சேவை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

  மதுரை:

  திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

  நடிகர் கமல்ஹாசன் சினிமா துறையில் பல்வேறு விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் அவருக்கு அரசியல் ஞானம் இல்லை. அனுபவம் இல்லை. கமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது. அவர் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.

  தற்போது இந்து மதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். அவர் சினிமா துறையில் நல்ல கலைஞன். எனவே கட்சியை கலைத்து விட்டு மீண்டும் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவர் போல காட்டிக் கொள்ள நினைக்கிறார். அவருக்கு நிலையான கொள்கை, கருத்து என்று எதுவும் கிடையாது.

  இந்த தேர்தலில் தி.மு.க. வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு. க.வை பொறுத்தவரை என்றும் மதச்சார்பற்ற நிலை தான். ஆனால் தி.மு.க.வினர் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் போல ஏமாற்று நாடகம் போடுகிறார்கள். அதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு செயலற்ற ஆளுமைத்திறனற்ற தலைவர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

  கொடைக்கானல்:

  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

  கொடைக்கானலுக்கு அதிகமான திட்டங்களை நிறைவேற்றபட உள்ளது. சீசன் நேரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக நவீன கார்பார்க்கிங் வசதி அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். மூணாறு சாலையை விரைவில் திறக்கப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்வேன்.

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு செயலற்ற ஆளுமைத்திறனற்ற தலைவர். அ.தி.மு.கவில் வெற்றிபெற்று அதிகமான பணம் சம்பாதித்து தற்போது பதவி ஆசையில் இங்கு சம்பாதித்த பணத்தை தி.மு.க.வில் சேர்ந்து சீட் வாங்கி செலவு செய்து வரும் செந்தி ல்பாலாஜி அரசியல் நாகரீகம் அற்றவர். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்ட அவர் தி.மு.க.வில் பதவி சுகத்துக்காக சேர்ந்தது ஒரு பச்சோந்திதனம். கொடைக்கானல் கீழ்மலை விவசாயிகளின் வசதிக்காக பழச்சாறு பதப்படுத்தும் கிடங்கு அமைக்க கூட்டுறவு வேளாண்துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

  இவ்வாறு அவர் கூறினார்.

  எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNAssemblyByPolls #SellurRaju
  அவனியாபுரம்:

  மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜூ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டி ஆரம்ப கால அடிப்படை தொண்டர் ஆவார். அவரது பணியை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

  அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

  சட்டமன்ற இடைத்தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடும். அதுகுறித்து எங்களுக்கு பயமில்லை. மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். மக்களுக்கான தேவையை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.


  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுரை புறநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் கண்மாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

  மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

  திருப்பரங்குன்றம் தொகுதியில் தனி கவனம் செலுத்தி அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையும் இந்த தொகுதியில்தான் வரவுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெற வைப்பார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார். #TNAssemblyByPolls #SellurRaju
  மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #ministersellurraju

  மதுரை:

  மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி வாக்குச் சாவடியில் இன்று காலை குடும்பத்துடன் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  சித்திரை திருவிழா காலத்திலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலை பொறுத்தவரை மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு மக்களை சந்தித்தோம்.

  தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்த அரசுகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

  எனவே மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

  இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju

  தேர்தலுக்காக மட்டும் வரும் நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ministersellurraju

  மதுரை:

  மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

  தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரம்பு மீறி பேசி வருகிறார். அரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.

  தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? இருளில் மூழ்க வைத்த தி.மு.க. எந்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறது? சாதனைகள் எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. இதனால் தனி நபர் விமர்சனம் செய்கிறார்கள்.

  நடிகர்கள் தேர்தலுக்கு மட்டுமே வந்து முதல்- அமைச்சராகி விடலாம் என்று நினைக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

  பாராளுமன்ற தேர்தல் என்பதால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் மோடி தான் கதாநாயகன். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவார். அ.தி. மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #ministersellurraju

  ரூ.1000, ரூ.2000, ரூ.6000 ஆகிய 3 அணுகுண்டு போன்ற திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #LSPolls #TNMinister #SellurRaju
  மதுரை:

  மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

  இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல் ஆகும். எனவே நாம் தேர்தல் பணிகளை முழுவீச்சாக செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகும் வகையில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும்.  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

  பொங்கலுக்கு அனைவரது குடும்பத்துக்கும் முதல்-அமைச்சர் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கினார். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

  இந்த மூன்று திட்டங்களும் 3 அணுகுண்டுகள் போன்றவை. இந்த திட்டம் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

  இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #SellurRaju
  பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #admk #parliamentelection

  மதுரை:

  மதுரை மாநகர் அருள் தாஸ்புரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியதாவது:-

  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் மகத்தான இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள்.

  ஏழை எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும் காலம் இது. எனவே மக்கள் இந்த அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

  ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

  வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மெகா கூட்டணியை அ.தி.மு.க. ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும்.

  வெற்றியுடன் பிறந்த இயக்கம். இதனை வீழ்த்த யாராலும் முடியாது. தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தந்துள்ளோம். எனவே இந்த ஆட்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலை ராஜா, பரவை ராஜா, சண்முகவள்ளி, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #admk #parliamentelection

  வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போய் விடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #admk

  மதுரை:

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நீதிபதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர்ராஜூ ஆலோசனைகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

  வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. இதனை எதிர்க்கட்சிகள் பார்த்து அச்சம் கொள்கிறது. இன்னும் சில கட்சிகள் நம் அணிக்கு வர உள்ளது. நாம்தான் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

  மக்களும் நம்மை ஆதரிக்கிறார்கள். எனவே வெற்றியுடன் பிறந்த இயக்கம் அ.தி.மு.க.வுக்கு இனி ஒருபோதும் தோல்வி கிடையாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைப்பதில் அம்மாவின் செயல்பாட்டை காண்பித்து விட்டனர். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே தோல்வி பயம் வந்து விட்டது. நாம் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற உழைக்க வேண்டும். நமது தேர்தல் பணி மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போக வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

  மு.க.ஸ்டாலின் எப்படியாவது பொய்யை கூறி இந்த அரசை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு நிறைவேறாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அம்மாவின் ஆட்சியை, கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். எனவே அம்மாவின் இலட்சிய பணி இன்னும் 100 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. நிரந்தர சேவை செய்யும்.

  அந்த வகையில் தான் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. நம்பி வந்தவர்களை வாழ வைக்கும் இயக்கம். இந்த இயக்கம் நம்பியவர்களை கைவிட்டது இல்லை. ம.தி.மு.க., தே.மு. தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் ஜெயலலிதா. அதனை மறந்து விடக்கூடாது.

  எனவே அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், மதுரை புறநகர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், தேனி மாவட்ட பேரவை செயலாளர் ரவீந்திரநாத் குமார், நிலையூர் முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் தவசி, பூமாராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #admk

  பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. கதை முடிந்துவிடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #ministersellurraju #admk #parliamentelection #dmk

  மதுரை:

  மதுரை மாநகர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:-

  அ.தி.மு.க. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

  கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஆனால் இப்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் பொய்யை மக்களிடம் விதைத்து வருகிறார். இதனை மக்கள் நகைப்பாக பார்க்கிறார்கள்.

  அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. அணியில் சேர்ந்துள்ளன. இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

  இந்த தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. கதை முடிந்துவிடும். அதனை அ.தி.மு.க. தொண்டர்கள் முடித்து வைத்தார்கள் என்ற பெருமை நமக்கு உருவாகும் வகையில் நாம் உழைக்க வேண்டும்.

  புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவை வருகிற 24-ந்தேதி சிறப்பாக அனைத்து வார்டுகளிலும் ஒலிபெருக்கி அமைத்து சாதனை பாடல்களை ஒலிபரப்பி கொண்டாட வேண்டும். கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

  வருகிற 27-ந்தேதி பழங்காநத்தத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 50 ஆயிரம் பேர் திரண்டு தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அணி செயலாளர்கள் இந்திராணி, தமிழ்செல்வன், ராஜீவ்காந்தி, அரவிந்தன், மாணிக்கம்.

  பகுதி செயலாளர்கள் பிரிட்டோ, அண்ணா நகர் முருகன், ஜெயவேல், மாரியப்பன், வட்ட செயலாளர்கள் கே.வி.கே. கண்ணன், பஜார் துரைப்பாண்டி, தேவதாஸ், சக்திவிநாயகர் பாண்டியன், தாஸ், முத்துவேல், ரவி, நல்லுச்சாமி, கணேசன், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.