search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாயையும்-மகனையும் இழந்து தவிக்கிறேன்: அமைச்சர் செல்லூர்ராஜூ உருக்கம்
    X

    தாயையும்-மகனையும் இழந்து தவிக்கிறேன்: அமைச்சர் செல்லூர்ராஜூ உருக்கம்

    பெற்ற தாயையும், மகனையும் இழந்து தவிக்கிறேன் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கமாக பேசினார். #SellurRaju
    மதுரை:

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ். இவரது தாயார் எலிசபெத் ஜெயசீலியின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கரிமேட்டில் உள்ள பள்ளி மைதானத்தில் அம்மா எலிசபெத் ஜெயசீலி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ உதவித் தொகை, சலவை பெட்டி, மூன்று சக்கர சைக்கிள், ஆட்டோ என சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர்ராஜூ வழங்கினார்.

    ஏழை, எளிய மக்களுக்காக வாரி வழங்கும் வள்ளலாக கிரம்மர் சுரேஷ் விளங்கி வருகிறார். அவரை போன்ற உதவும் குணம் இளைஞர்களுக்கு வேண்டும்.

    தனது தாயை இழந்த கிரம்மர் சுரேஷின் மனதை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் மகனையும், தாயையும் இழந்தவன் நான். நானும் என் தந்தையை பார்த்தது இல்லை என்று பேசியபோது கண்கலங்கினார்.

    தொடர்ந்து பேசிய செல்லூர்ராஜூ, எனது தாய் பட்ட கஷ்டங்கள் ஏராளம். என்னை பெற்றெடுத்த தாய் என்னை உருவாக்கினார். ஆனால் புரட்சித்தலைவி அம்மா உலகறிய வைத்தார்.

    என் மகன் தமிழ்மணி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவரும் ஏழை-எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்தான். அவரது பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி உதவிகள் செய்து வருகிறோம். இப்போது என் மகன் வடிவத்தில் கிரம்மர் சுரேசை பார்க்கிறேன். என் இதயத்தைநான் எப்படி பராமரிப்பேனோ அப்படி கிரம்மரை நான் பார்த்துக் கொள்வேன்.

    மதுரை நகரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கிரம்மர் சுரேஷ் தொடர்ந்து சேவை செய்வார். இவரை போல பெற்றோரை நேசிக்க இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார். #SellurRaju
    Next Story
    ×