search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant"

    • வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், ஜீவா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 31). இவருக்கு மூளை நரம்பு வியாதி உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் குமார் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வண்டியூர் சதாசிவம் நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 46). இவர் அனுமார் பட்டியில் இரும்பு கடை நடத்தினார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனைவி சியாமளா கணவருடன் கோபித்துக் கொண்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரி கிருஷ்ணன் நேற்று இரும்பு கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
    • சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    மதுரை மாவட்டம் எம்.கல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 36). இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 15 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுவனிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

    • பண்ருட்டி அருகே முந்திரி பயறுடன் காரில் சென்ற வியாபாரியை வழிமறித்து மர்ம கும்பல் தாக்கினார்கள்.
    • தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரசிங்கன்குப்பம் கிராமத்தைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் தவசி. இவருக்கும் அதே பகுதியைசேர்ந்தசங்கர், சரத்குமார் என்பவருக்கும் முந்திரி பணம் கொடுக்கல்-வாங்கலில் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார், முத்துவேல்என்பவரிடம் 500 கிலோ முந்திரி பயறு எடைபோட்டு வாங்கிக் கொண்டு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கர் வீட்டு முன்பு சென்று கொண்டிருந்த போது சங்கர், சரத்குமார், ஆனந்தகுமார்உள்ளிட்ட 6 பேர்காரை வழிமறித்து கிருஷ்ணகுமாரை உருட்டு கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், முந்திரி பயிரையும், தவசி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீஸ்சப்இன்ஸ்பெக்டர் ராஜாராமன்இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து 6பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஆறுமுகசாமிக்கு சொந்தமான கடை சுரண்டை மார்க்கெட்டில் உள்ளது.
    • சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் ராஜ்குமார்(வயது 34). இவருக்கும், கழுநீர்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஆறுமுகசாமிக்கு சொந்தமான கடை சுரண்டை மார்க்கெட்டில் உள்ளது. அதில் தந்தைக்கு உதவியாக ராஜ்குமார் இருந்து வந்தார். சம்பவத்தன்று மனைவி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

    உடனே ஆறுமுகசாமி, தனது மருமகள் வீட்டுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால் அங்கு அவரது மகன் செல்லவில்லை என்பது அதன் பின்னரே தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகசாமி தனது மகன் காணாமல் போனது குறித்து சுரண்டை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாளை வி.எம். சத்திரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
    • அய்யப்பனுக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும், அதைக் கவனிக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளை வி.எம். சத்திரம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். தற்போது பள்ளிக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் அய்யப்பனின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு ராமானுஜம் புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் இன்று காலை அய்யப்பன் கடையை திறக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    உடனடியாக அய்யப்பனை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அய்யப்பன் பரிதாபமாக இறந்தார்

    .இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், அய்யப்பனுக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும், அதைக் கவனிக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    • இரும்பு கடை வியாபாரி நடுரோட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • அண்ணாமலை புதூர் கிராமத்துக்கு சேர்மன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    திருமங்கலம்

    திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சேர்மன் (வயது 48). இவர் சென்னையில் இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சரவணகாந்திமதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் சொந்த ஊரான தென்காசி அருகே உள்ள அண்ணாமலை புதூர் கிராமத்துக்கு சேர்மன் குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு நடந்த விழாவில் பங்கேற்று விட்டு சம்பவத்தன்று அவர் மட்டும் பஸ்சில் இரவு சென்னைக்கு புறப்பட்டார்.இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுச்சாலையில் உள்ள கருவேலம்பட்டி பகுதியில் சேர்மன் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பஸ்சில் செல்லும்போது சேர்மன் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளச்சல் அருகே பேஸ்புக் நண்பர் திருமணத்திற்கு வந்த இடத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே இணையம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் வினோபின் ராஜ் (வயது 30).

    இவர், ஓமனில் கப்பல் செய்யும் இடத்தில் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது திருமணம் நேற்று இணையம் புத்தன் துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. திருமண விழாவிற்கு அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வினோபின் ராஜின் பேஸ்புக் நண்பர்கள் திருப்பூர் ஆத்துகிணத்துப்பட்டி சங்கீதா (24), சேலம் ராமலிங்கம் காலணி சங்கராலயம் ரோட்டையைச் சேர்ந்த மோகன் (33) மற்றும் பலரும் வந்திருந்தனர்.

    திருமண விழாவிற்கு வந்திருந்த பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகம் ஆகிக் கொண்டனர். வினோபின் ராஜின் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர்.

    கடற்கரையில் நின்று கொண்டு சங்கீதா, மோகன் உள்பட நண்பர்கள் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீதாவின் மூக்கு கண்ணாடி கடலில் விழுந்தது. இதை மோகனும், சங்கீதாவும் தேடினார்கள்.அப்போது வந்த ராட்சத அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் கடல் அலையில் சிக்கிய சங்கீதாவை மீட்டனர். மோகனை அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    மீட்கப்பட்ட சங்கீதாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சங்கீதா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சங்கீதா பலியானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

    பலியான சங்கீதா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    கடல் அலை இழுத்துச் சென்ற மோகனை தேடும் பணி இன்றும் நடந்தது. மோகன் இழுத்துச் சென்ற பகுதியில் இருந்து ஒரு நாட்டிங்கல் தொலைவில் அவர் பிணமாக மிதப்பதை பார்த்த மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மீனவர்கள் உதவியுடன் மோகனின் உடலும் மீட்கப்பட்டது. கரைக்கு கொண்டு வரப்பட்ட மோகனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பலியான மோகன் காய்கறி வியாபாரி ஆவார். அவருக்கு பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடலில் மூழ்கி பலியான சங்கீதா, மோகனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தி வருகிறார். #vikramaraja #vanigarsangam

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பேரமைப்பின் வட சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மே 5 வணிகர் தின ஆலோசனை கூட்டம் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு சண்முகா மஹாலில் மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு தந்து பேரமைப்பு நடத்தும் 36-வது மாநில மாநாட்டை வெற்றிகரமான மாநாடாக அமைய அனைவரும் பல்லாயிரக்கணக்கான வணிகர்களுடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில இணைச் செயலாளர் எஸ்.எம்.பி.செல்லத்துரை, மாவட்ட தலைவர்கள் சாமுவேல், ஆதி குருசாமி, ஜெயபால், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ஜெய்சங்கர், அமைப்புச் செயலாளர் குணசேகரன்,

    மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பால்ராஜ், செல்வக்குமார், லட்சுமண ராவ், ரவிசெல்வம், புருசோத்தமன், அன்னைபாபு, முருகேசன், செல்வராஜ் பங்கேற்றனர்.

    அனைவரையும் கொளத்தூர் பூம்புகார்நகர் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் வி.பி.வில்லி யம்ஸ் வரவேற்க வி.சால மோன்ராஜா நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.

    முன்னதாக செரிமனி ஓட்டலில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 5-ந்தேதி 36-வது மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக நடைபெறுகிறது.

    வணிகர்களுக்கு பென்ஷன் தருவது, ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டுத் திட்டம், வணிகர் நல வாரியம் அமைத்தல், பிணையில்லா ரூ.50 லட்சம் கடன் உதவித் திட்டம், வணிகர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அளிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை எங்களது பேரமைப்பு வரவேற்கிறது.

    மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் இந்த திட்டங்களை உறுதியாக நிறைவேற்றிட பேரமைப்பு போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #vikramaraja #vanigarsangam

    அந்தியூர் அருகே பு.புளியம்பட்டி வியாபாரியிடம் ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் கணேசனிடம் பணத்தை ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஏற்றும் வாகனத்தை சோதனை செய்தபோது புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (46) என்பவர் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் அந்தியூர் வழியாக சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்குவதற்க்காக பணம் 77 ஆயிரம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

    முறையான ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ரூ. 77 ஆயிரம் தொகையை ஒப்படைத்தனர். #LokSabhaElections2019



    சத்தியமங்கலத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரிகளிடம் ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பகல், இரவு என விடிய விடிய அதிரடி வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிப்பட்டி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் நள்ளிரவில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஊட்டியில் இருந்து ஈரோடு வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் இருந்த மாட்டு வியாபாரி அப்துல் மஜித் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் இருந்தது.

    இந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் சத்தியமங்கலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் மேடு என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி நாகேந்திரன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தீனதயாளன் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த ஒரு காரில் வாழைக்காய் வியாபாரி மகேந்திரனிடம் (29) ரூ.95 ஆயிரம் இருந்தது.

    இவர் வாழைக்காய் விற்ற பணத்தை கொண்டு வருவதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதே இடத்தில் மற்றொரு வேனை பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது அந்த வேனில் வந்த காய்கறி வியாபாரி புளியம்பட்டியை சேர்ந்த முகமது ஜக்காரியா (37) என்பவரிடம் ரூ.96 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.

    அவர் காய்கறி விற்று வாங்கிய பணம் என கூறினார். எனினும் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    பொள்ளாச்சியில் வியாபாரியிடம் நகை-பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


    ஆப்பக்கூடல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ. 1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஆப்பக்கூடல்:

    கேரள மாநிலம் குட்டி சிறா என்ற பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதிக்கு புஜூ என்பவர் வாழைக்காய் லோடு ஏற்றிக் கொண்டு ஈச்சேரில் வந்து கொண்டிருந்தார்.

    ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி கை காட்டி பிரிவில் வந்த போது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் ஜெயக்குமார் என்பவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஈச்சேர் மினி லாரியை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர் அப்போது ரூ.1½ லட்சம் கொண்டு வரப்பட்டதையும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதே போல் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நால் ரோடு பஸ் நிறுத்தம் முன் தேர்தல் பறக்கும் படையினர்(பெருந்துறை சட்டமன்ற தொகுதி) அதிகாரி மோகன சுந்தரம் தலைமையில் கொடுமுடி சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர் அதில் அந்தியூர் அருகே உள்ள ஆலமரத்து காடு பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (48) என்பவர் கன்னிவாடி சந்தைக்கு ஆடு வாங்க ரூ. 87050-ஐ எடுத்து கொண்டு சென்றார்.

    ஆனால் அந்த பணத்துக்கு ஆவணம் இல்லாததால் அதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் பிறகு அதை பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

    ×