search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surandai"

    • சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

    நெல்லை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதனால் சுரண்டை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையிலான போலீசார் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது அதில் 300 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அதனையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில், அந்த நபர் கீழ சுரண்டை மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்த திருமலைக்குமார் என்பவரது மகன் நவீன்(வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது கஞ்சா விற்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்குவதால் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.
    • காய்ச்சல் இருந்தால் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.


    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகராட்சி அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொறியாளர் முகைதீன் தலைமை தாங்கினார்.

    கவுன்சிலர் வைகை கணேசன்,வேல் முத்து, நகராட்சி மேலாளர் வெங்கட சுப்பிர மணியன், தலைமை கணக்காளர் முருகன், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார்,சுகாதார ஆய்வாளர் பாலசுப்ர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சுரண்டை நகராட்சி சேர்மன் பேசியதாவது:-

    தற்போது மழைக்காலம் தொடங்கியதால் தனது வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பொது மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்குவதால் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.தங்கள் வீட்டில் உள்ள சின்டெக்ஸ், தண்ணீர் தொட்டி,பிரிட்ஜ் போன்றவற்றை ஆய்வு செய்ய வரும் நகராட்சி பணியாளர்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் ஆரம்பத்திலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினர்.

    தொடர்ந்து சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி நகராட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார்.முடிவில் நகராட்சி பணியாளர் சங்கீதா நன்றி கூறினார். 

    • பசுபதி ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
    • நேற்று காலை பசுபதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் பசுபதி. (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பசுபதி தற்போது குடும்பத்துடன் கீழ சுரண்டை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பசுபதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று மாலை அவரது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது 5 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அப்போது அதில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. சுமார் 650 கிராம் எடை கொண்ட அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 5 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து ச்சென்று நடத்திய விசாரணை யில், சுரண்டையை சேர்ந்த மாரிசெல்வம்(24), கவுதம்(23), தங்கராஜ்(28), கோகுல்(20), காளிராஜ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் முருகன் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • மின்சாரம் பாய்ந்ததில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    நெல்லை:

    சுரண்டை அருகே உள்ள முத்துமாலைபுரம் வேலப்பனூரை சேர்ந்தவர் முருகன்(வயது 53). இவர் கிணறு வெட்டும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கீழ சுரண்டையில் இருந்து ஆலடிப்பட்டிக்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அவர் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கிணற்றின் உள்ளே தேங்கி கிடந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக மின்மோட்டாரை உள்ளே வைத்து முருகன் இயக்கினார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலைத்திறன் போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
    • வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி அணியினருக்கு பாிசு, கேடயம் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோாி மற்றும் பாரத் வித்யா மந்திா் உள்ளிட்ட பாரத் கல்வி குழுமத்தின் சாா்பில் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    போட்டியில் எஸ்.ஆர். பள்ளி குழுநடனம், ஆடையலங்காரம், புதிா் போட்டி, கணித ஒலிம்பியாய்டு, மாஸ்டா் பெகாசஸ் போன்ற போட்டிகளில் முதல் இடத்தையும், வண்ணம் தீட்டுதல், புத்தக உறை தயாாித்தல் போன்ற போட்டிகளில் 2-ம் இடத்தையும், படக்கதை ஒருங்கிணைத்தல், வாா்த்தை விளையாட்டு, குழுப்பாடல், வினாடி-வினா போன்ற போட்டிகளில் 3-வது இடத்தையும் பெற்று இளையோா் பிாிவில் 3-ம் இடமும், ஒட்டுமொத்த அளவில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் அணியினா் 2-ம் இடமும் பெற்றனா்.

    வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி அணியினருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பாிசு, வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை இலஞ்சி ஆக்ஸஸ் வங்கியின் முதன்மை மேலாளா் மாாியப்பன், பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளா் காந்திமதி மோகன கிருஷ்ணன் ஆகியோா் இணைந்து வழங்கினா். எஸ்.ஆர். பள்ளி செயலருக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி ஆகியோா் பாராட்டினா்.

    • விழாவில் எண்களை மையமாக கொண்டு குழந்தைகள் பாடல் பாடி, நடனம் ஆடினர்.
    • ஆசிரியை விஜயலெட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சுரண்டை:

    சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர்களால் எண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் எண்களை மையமாக கொண்டு குழந்தைகள் பாடல் பாடி, நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்தினர். தாங்கள் கொண்டு வந்த எண்களின் பொருட்களை காட்சிப்படுத்தினர். அதனை கொண்டு செயல்பாடுகள் செய்தனர். மாணவர்கள் ஜெய்வேலன் மற்றும் ராம்திலக் சிறப்புரையாற்றினர். ஆசிரியை விஜயலெட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியை மஞ்சுளா மாணவர்களை ஒருங்கிணைத்தார்.

    • சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்காக 15-வது நிதிக்குழு மானியத்தில் 13 பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி வரவேற்று பேசினார்.

    இதில் பழனிநாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்காக பேட்டரி வாகனங்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் கரையாளனுர் சண்முகவேல், ஆறுமுகசாமி, பூல்பாண்டியன், சாமுவேல் மனோகர், ஆலடிப்பட்டி ராமசாமி, அப்துல்காதர், சங்கரநயினார், கூட்டுறவு கணேசன், ஸ்டீபன் சத்யராஜ், முல்லை கண்ணன், கோமதிநாயகம், செல்வகுமார், சசிகுமார், ஜோசியர் தங்க இசக்கி, மோகன், பால் என்ற சண்முகவேல், தேவேந்திரன், சமுத்திரம், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, ரமேஷ், பரமசிவன், அந்தோணி சுதா ஜேம்ஸ், சிவஞான சண்முகலட்சுமி, அம்சா பேகம், ஜெயச்சந்திரன், சாலமோன், கந்தையா, தபேந்திரன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குடிநீர்,சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி நகராட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.
    • குப்பை வாங்குவதற்காக வந்துள்ள வண்டிகள் சோதனை செய்த பின்பே நகராட்சி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் வேல்முத்து நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் 5000 லிட்டர் குடிநீர் தொட்டி உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.

    அதை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் அமுதா சந்திரன் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார். கருப்புச்சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்ட 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பரமசிவன் தொடர்ந்து தனது வார்டு பகுதியில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

    26-வது வார்டு கவுன்சிலர் ஜெயபாலன் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்காக 3 மண்டலங்களாக பிரிக்க வேண்டும், மக்கள் பிரச்சினையை தெரிவிப்பதற்காக மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பதினைந்தாவது நிதி குழு மானியத்தில் நகராட்சிக்கு வாங்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளை தரமானதா என சோதனை செய்த பின்னரே பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும், காங்கிரஸ் கவுன்சிலர் பாலசுப்ரமணியம் பேசும்போது, வீடு கட்டுவதற்கான அப்ரூவல் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர் வள்ளி முருகன் குடிநீர் பிரச்சினை மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கி நகராட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் துரிதமாக மக்களுக்கு குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குப்பை வாங்குவதற்காக வந்துள்ள வண்டிகள் சோதனை செய்த பின்பே நகராட்சி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும் எனக் கூறினார்.

    • விழிப்புணர்வு பேரணியானது சுரண்டை பொட்டல் மாடசாமி கோவிலில் இருந்து தொடங்கியது.
    • மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    சுரண்டை:

    சுரண்டையில் மனித உரிமை களம் மற்றும் காப்புக்களம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. சுரண்டை பொட்டல் மாடசாமி கோவிலில் இருந்து தொடங்கிய பேரணிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். காப்புக்களம் இயக்குனர் பரதன் முன்னிலை வகித்தார்.

    வளமான எதிர்காலம்

    இதில் பழனி நாடார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகள் கையில் தான் இந்தியாவில் வளமான எதிர்காலம் உள்ளது.

    அவர்களின் கல்விக்காகவே மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், சாந்தி தேவேந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, கந்தையா, ராஜன், பிரபாகர், காப்புக்களம் நிர்வாகிகள் சந்திரா பரமேஸ்வரி, வர்க்கீஸ் ராணி மற்றும் மஸ்தூர் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொருட்கள் வாங்குவதற்காக ஜெயா அப்பகுதியை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
    • ஜெயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நெல்லை:

    சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரித்துரை. இவரது மனைவி ஜெயா (வயது 52). இவர்கள் அங்கு புதிய வீடு கட்டி வருகின்றனர்.

    அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சம்பவத்தன்று ஜெயா அங்குள்ள ஒரு கடைக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரண்டை பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி கூட்டம்   தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், நகராட்சி ஆணையாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

    கூட்டத்தில் சுரண்டை நகராட்சி பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதை த்தொடர்ந்து சொத்துவரி குறித்த தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்பட்டது.

     அப்போது 8-வது வார்டு  கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான சக்திவேல் தலைமையில் துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், கவுன்சிலர்கள் வசந்தன், பொன் ராணி, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 25-வது வார்டு கவுன்சிலர் வினோத்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    அ.தி.மு.க.வினர் வெளிநடப்பை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
    ×