search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK history"

    • தி.மு.க. ஆட்சி தான் இனி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும்.
    • கட்சி பெயரில் உள்ள அண்ணாவை மறந்து விட்டு மோடியிடம் சரணாகதி அடைந்து கிடக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

    சுரண்டை:

    சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார்.

    கலைஞர் படிப்பகம்

    தமிழகத்தில் முதல் முறையாக சோலார் மின்விளக்கு கொடி கம்பத்தில் கலைஞர் படிப்பகம் அமைக்கப் பட்டது.அதை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பொதுக் கூட்டத்தில் பேசிய தாவது:-

    தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது

    தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்ததாக இதுவரை வரலாறு உள்ளது. தி.மு.க. எமர்ஜென்சியை சந்தித்த இயக்கம்.எந்த காலத்திலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.இன்று மாவட்ட செயலாளர்களுக்கு பணம் கொடுத்து அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் அவரை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். கட்சி பெயரில் உள்ள அண்ணாவை மறந்து விட்டு மோடியிடம் சரணாகதி அடைந்து கிடக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

    தி.மு.க. ஆட்சி தான் இனி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும். உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற உயரிய கொள்கையுடன் முதல்-அமைச்சர் மு.க‌.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    இலவச பஸ் பயணம்

    பெண் குழந்தை களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, மகளிர் சுய உதவி குழுக்களை தோற்றுவித்து கடன் வழங்கியது. உலகமே போற்றும் பொன்னான திட்டமான மகளிருக்கு இலவச பஸ் பயணம் என பெண்களின் வளர்ச்சிக்காக தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

    தி.மு.க. அரசு பெண் குழந்தைகள் கல்விக்கு பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது. தி.மு.க. அனைத்து சமுதாய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இயக்கம். திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் தரம் உயர்த்தப்படும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கால்நடை துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை கொடுத் துள்ளார். கால்நடைத்துறை தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் செய்து கொடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா, கடையநல்லூர் இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் எம்.பி.எம்.அன்பழகன், சீனித்துரை, வெற்றி விஜயன், பெரியதுரை,அழகு சுந்தரம், செல்லதுரை,ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது,திமுக நிர்வாகிகள் என்.எஸ். சுப்பிர மணியன்,பூல் பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர் பரமசிவன், வெள்ளத்துரை பாண்டியன்,வடகரை ராமர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்,நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    ×