என் மலர்
உள்ளூர் செய்திகள்

விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
சுரண்டை அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சுரண்டை அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுரண்டை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்காததால் தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று மாலை 3 மணிக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மண்டல செயலாளர் சித்திரைக்கனி தலைமையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட கோரி வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது.
இதில் கவுரவ விரிவுரையாளர்கள் ஹரிஹரசுதன், முருகன், அண்ணாமலை, ரமேஷ், சந்தனதேவி, மாரிச்செல்வி, கார்த்திக், குமாரவேல், குழல்வாய்மொழி, ஷீபாஞானமலர், முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story