என் மலர்
நீங்கள் தேடியது "Lecturers"
- பரமக்குடி அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்து, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி யில் 66-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டி.ஆர்.பி மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் 2,391 உதவி பேராசிரியர்கள் நியமிக்க குறிப்பானை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, கவுரவ விரிவுரையாளர்களை பழி வாங்கும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
புதிய அரசாணையை ரத்து செய்து பழைய அரசாணையின்படி உதவி பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்காததால் தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று மாலை 3 மணிக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மண்டல செயலாளர் சித்திரைக்கனி தலைமையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட கோரி வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது.
இதில் கவுரவ விரிவுரையாளர்கள் ஹரிஹரசுதன், முருகன், அண்ணாமலை, ரமேஷ், சந்தனதேவி, மாரிச்செல்வி, கார்த்திக், குமாரவேல், குழல்வாய்மொழி, ஷீபாஞானமலர், முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






