என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    சுரண்டை பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    சுரண்டை பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி கூட்டம்   தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், நகராட்சி ஆணையாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

    கூட்டத்தில் சுரண்டை நகராட்சி பகுதியில் 10 இடங்களில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதை த்தொடர்ந்து சொத்துவரி குறித்த தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்பட்டது.

     அப்போது 8-வது வார்டு  கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான சக்திவேல் தலைமையில் துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், கவுன்சிலர்கள் வசந்தன், பொன் ராணி, மாரியப்பன், ராஜேஷ் மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 25-வது வார்டு கவுன்சிலர் வினோத்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    அ.தி.மு.க.வினர் வெளிநடப்பை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×