என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை
  X

  சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாங்கள் குலையநேரி கிராமத்தில் வசித்து வருகிறோம். ஊருக்கு வெளிப்புறமாக சுரண்டை -சங்கரனகோவில் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது
  • ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுரண்டை:

  தென்காசி மாவட்ட கலெக்டருக்கு, சுரண்டை அருகே உள்ள குலையநேரி ஊர் பொதுமக்கள் சார்பில் சக்திவேல்ராஜ் என்பவர் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

  நாங்கள் குலையநேரி கிராமத்தில் வசித்து வருகிறோம். ஊருக்கு வெளிப்புறமாக சுரண்டை -சங்கரனகோவில் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இங்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு பிரசித்தி பெற்ற பரும்படி மாடன் கோவிலும். தொழிற்சாலைகளும் அருகில் இருக்கின்றன. அங்கு வரும் பக்தர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×