search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்-நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
    X

    சுரண்டை சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.


    சுரண்டை பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்-நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

    • சுரண்டை நகராட்சி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சிக்குட்பட்ட சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்திலும், சுரண்டை நகராட்சி அலுவலகத்திலும், சுரண்டை ராஜம் தொடக்கப்பள்ளி வளாகத்திலும், கீழ சுரண்டை இந்து நாடார் திருமண மண்டபத்திலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.

    மேலும் தொடர்ந்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி தலைவர் வள்ளி முருகனிடம் பொதுமக்கள் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் சுரண்டை வருவாய் ஆய்வாளர் கண்ணன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகணேஷ் சங்கர் மற்றும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×