என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுரண்டை அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
- அம்மையாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- காளைசாமி, மாடசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி:
சுரண்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மையாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காளைசாமி (வயது 58), சேந்தமரம் பகுதியை சேர்ந்த மாடசாமி (25) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர்களிடம் ரூ. 3,700 மதிப்பிலான சுமார் 9 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காளைசாமி, மாடசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






