என் மலர்

நீங்கள் தேடியது "Sudden death"

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
 • சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

பரமத்தி வேலூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரஹாசநல்லி மன்னப்பன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ். வாழவந்தியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் ரத்தினம் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார், ரத்தினத்தின் மகள் வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் .தகவலின் அடிப்படையில் ரத்தினத்தின் மகன் விஜயகுமார் மற்றும் அவரது சகோதரி வெண்ணிலா ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர்களது தந்தை ரத்தினம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 2 பேரும் எஸ். வாழவந்தியில் உள்ள கல்குவாரிக்குச் சென்று அங்கு அவரது தந்தையுடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போது ரத்தினம் காலை 9 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அங்கு வந்த கல்குவாரியின் உரிமையாளரின் தாயார் சாந்தாமணி சத்தம் போடவே ரத்தினத்துடன் வேலை பார்க்கும் ராஜேந்திரன் மற்றும் குழந்தைவேல் ஆகியோரின் உதவியுடன் ரத்தினத்தை கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார் அவரது காரில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், கூறியுள்ளனர்.

இதுகுறித்து விஜயகுமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பரமத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
 • ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.

நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை தியாகராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 34). இவரது மனைவி சீதாலெட்சுமி(26).

கடந்த சில நாட்களாக ரமேஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.

சிறிது நேரத்தில், ரமேசை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீரென இறந்தார்.
 • விழுப்புரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ளஅன்னியூரை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி பிரதீபா (வயது 22). இவர்கள் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். கடந்த 13. 6. 2022 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் விழுப்பு ரம் சென்று அங்கு ஒரு ஓட்டலில் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளனர். இந்நிலையில் இரவு 11.30 மணிக்கு பிரதீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்ப ட்டுள்ளது. உடனடியாக அவரை அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று காட்டும் போது டாக்டர்புட் பாய்சன் என்று கூறியதாக தெரி கிறது. இதனால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கஞ்சனூர் போலீ சார் விசாரணை செய்த வருகிறார்கள்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • சேலம் கிச்சிப்பாளையத்தில் இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி தொழிலாளி இறந்து கிடந்தார்.
 • மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50), தொழிலாளியான இவர் நேற்றிரவு குடி போதையில் வீட்டில் தூங்கினார்.

இன்று காலை வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ேபாலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியில் இருந்த வாலிபர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
 • நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த தண்டபாணி மகன் ரமேஷ்பாபு(38).

இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவி உள்ளார். இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் பணியில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பால் ரமேஷ்பாபு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • பணகுடி இஸ்ரோவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திடீரென இறந்தார்.
 • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(வயது 42) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு அவர் புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடன் இஸ்ரோவில் தங்கி இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்ற மாடசாமி மரத்தில் சாய்ந்தவாறு இறந்து விட்டார்.
 • தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் மாடசாமி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது57). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து உள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்ற மாடசாமி மரத்தில் சாய்ந்தவாறு இறந்து விட்டார். இதனை பார்த்தவர்கள் கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • தேனி அருகே தலைமை ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
 • மீண்டும் பணியில் சேர இருந்த நிலையில் தலைமை ஆசிரியர் திடீரென உயிரிழந்தார்.

வருசநாடு:

தேனி அருகே கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது53). இவர் காமன்கல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்ட இவர் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார்.

மேலும் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்த வழக்கு மதுரை மற்றும் பெரியகுளம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுபடி அவர் மீண்டும் பணியில் சேரலாம் என மயிலாடும்பாறை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேனி கல்வி அலுவலகத்தில் கடிதம் பெற்றுக்கொண்டு தனது ஊருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கிய ரவிச்சந்திரனை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • பாளை வி.எம். சத்திரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
 • அய்யப்பனுக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும், அதைக் கவனிக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நெல்லை:

பாளை வி.எம். சத்திரம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். தற்போது பள்ளிக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் அய்யப்பனின் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு ராமானுஜம் புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை அய்யப்பன் கடையை திறக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக அய்யப்பனை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அய்யப்பன் பரிதாபமாக இறந்தார்

.இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், அய்யப்பனுக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும், அதைக் கவனிக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தொழிலாளியை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
 • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பெருந்துறை:

மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் சித்தா கிராமம் பகுதியை சேர்ந்தவர் காளிசரண்பஹார். இவர் பெருந்துறை, பணி–க்கும்பாளையம் பகுதியில் மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.

கடந்த 3 மாதங்களாக மகன்கள் சேகர்பகர், சசாங்காபகர் ஆகியோருடன் பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

இதில் மகன் சேகர்பகர்க்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்து உள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சேகர்பகர் மயங்கி விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.