என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே முந்திரி பயறுடன் காரில் சென்ற வியாபாரியை வழிமறித்து தாக்கிய கும்பல்

- பண்ருட்டி அருகே முந்திரி பயறுடன் காரில் சென்ற வியாபாரியை வழிமறித்து மர்ம கும்பல் தாக்கினார்கள்.
- தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வீரசிங்கன்குப்பம் கிராமத்தைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் தவசி. இவருக்கும் அதே பகுதியைசேர்ந்தசங்கர், சரத்குமார் என்பவருக்கும் முந்திரி பணம் கொடுக்கல்-வாங்கலில் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார், முத்துவேல்என்பவரிடம் 500 கிலோ முந்திரி பயறு எடைபோட்டு வாங்கிக் கொண்டு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கர் வீட்டு முன்பு சென்று கொண்டிருந்த போது சங்கர், சரத்குமார், ஆனந்தகுமார்உள்ளிட்ட 6 பேர்காரை வழிமறித்து கிருஷ்ணகுமாரை உருட்டு கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், முந்திரி பயிரையும், தவசி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீஸ்சப்இன்ஸ்பெக்டர் ராஜாராமன்இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து 6பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.