search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pocso law arrested"

    • மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
    • சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    மதுரை மாவட்டம் எம்.கல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 36). இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 15 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுவனிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

    சேலத்தில் 8-ம் வகுப்பு மாணவியை ஆட்டோவில் வைத்து சில்மி‌ஷம் செய்த டிரைவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    முருகன் தினமும் காலையில் மாணவ, மாணவிகளை ஆட்டோவில் அழைத்து சென்று பள்ளியில் விடுவதும், பின்னர் மாலையில் அவர்களை அழைத்து வந்து வீட்டில் விடுவதும் வழக்கம்.

    இதற்காக மாதந்தோறும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பார்கள். மாணவ, மாணவிகளை வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதால் பெற்றோர் ஆட்டோ டிரைவர் முருகன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் முருகன் 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது ஆட்டோவில் வைத்து அந்த மாணவியிடம் அவர் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவி கண்ணீர் மல்க தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேராக அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டிரைவர் முருகன் மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார், முருகனை அழைத்துச் சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×