search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "life imprisonment"

    • நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.

    வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.

    • கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 5 பேர் தவிர 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார், பெரியவிளை, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் விஜிகுமார் (வயது 26).

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரியவிளையை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண் குமார் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை ஆனார்கள்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இன்று பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ், பெரியவிளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண்குமார் உட்பட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். இதில் இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரிய விளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மீதமுள்ள 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    மேலும் பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷுக்கு கொலை முயற்சி வழக்குக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழிமறித்து தாக்குதல் குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார்.

    தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.

    • கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
    • கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15,000ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பரமேஸ்வரி (வயது28), இவர் சம்பவத்தன்று தனது கணவர் சுப்ரமணியன் என்பவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையின் காரணமாக தனது மகள் கரிஷ்மா (9) என்பவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்துசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் விசாரணை முடிவுற்று நேற்று கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கீதாராணி தீர்ப்பு அளித்தார். அதில் அரசுதரப்பில் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் பரமேஸ்வரி குற்றவாளி என்று உறுதி செய்து கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15,000ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

    • வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
    • செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம், பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராக்கப்பன் (வயது 41). இவரின் 2-வது மனைவி ஜெயலட்சுமி, (30). முதல் மனைவியின் மகன் அருண்பாண்டியன் (19)

    இந்த நிலையில் தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவரசு (26) ராக்கப்பனுடன் நெருங்கி பழகிவந்தார். அப்போது ஜெயலட்சுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கப்பன்கடந்த 2014 ஏப்ரலில் போன் செய்து திருவரசுவை தன் வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை சுத்தியலால் தாக்கியும், முகத்தை தலையணையால் அழுத்தியும் ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண்பாண்டின் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.திருவரசுவைக் காணவில்லை என அவரது தம்பி இளையராஜா அளித்த புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்த போது, இந்த கொலை தெரியவந்தது.கொலை தொடர்பாக 3பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.இதில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் 3பேரும் ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தொழிலாளிக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது
    • பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த செங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது50). கூலி தொழிலாளியான இவர், வயல் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 21 வயது பெண்ணை, தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி இளங்கோவன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும், அபராதத் தொகை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    • விவசாயி கொலை வழக்கில் அவரது இரண்டாவது மனைவி மகன் மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    • திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் சாமிநாதன் (வயது 90) இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். முதல் மனைவிக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தை பராமரிக்க முதல் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவி பஞ்சவர்ணத்திற்கு தங்கமணி என்ற மகனும், சாந்தி என்ற மருமகளும் உள்ளனர். சாமிநாதன் தன்னிடம் இருந்த சொத்துக்களை தனது பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துவிட்டு, தனது கடைசி காலத்துக்காக ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயரில் வைத்துக் கொண்டு, இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது தனது பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும், இரண்டாவது மனைவி மகன் தங்கமணியின் மகனுக்கு சாந்தியை கார்டியனாக காண்பித்து உயிர் எழுதி வைத்துள்ளார், அதில் முதல் மனைவியின் மகன் தர்மராஜ் அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் பாதியை கேட்டு தகராறு செய்துள்ளார், சாமிநாதன் உயிரோடு இருந்தால் நிலத்தை பாதி எழுதி கொடுத்து விடுவான் என திட்டமிட்டு சொத்து தகராறு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அன்று இரவு இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி மூவரும் சேர்ந்து சாமிநாதனை வெட்டி கொலை செய்து விட்டனர். விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிவில் இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000- அபராதமும் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    • அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுட்கால சிறை தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் வினோத் (வயது27). இவர் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து கல்லூரி மாணவி பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்கள் வினோத் வீட்டில் சென்று கேட்டபோது திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இது குறித்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்து. இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி ஆனந்தன் வினோத்திற்கு கல்லூரி மாணவியை பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதற்காக ஆயுள் காலம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மேலும் வஞ்சனை செய்ததற்காக ஒரு வருடம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

    கும்பகோணம் அருகே வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் மெயின் சாலையில் வசிப்பவர் ரத்தினம் (65). இவரது மகன் செல்வம் (30). இவர்களது குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் ராசு குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் செல்வம் அதே பகுதியில் சென்ற போது அவரை ராசு மகன் கண்ணதாசன் (42) வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வம் அதே இடத்தில் இறந்தார்.

    இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளி கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
    நெல்லையில் மணல் கடத்தலை தடுத்த ஏட்டு கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்டது வடக்கு விஜய நாராயணம். இங்குள்ள போலீஸ் நிலையத்தில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ்துரை (வயது 33).

    இவர் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி இரவு ரோந்து பணியை முடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கக்கன்நகர் விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே ஒரு டிராக்டர் மணல் திருடி கொண்டு வேகமாக சென்றது. உடனே ஜெகதீஷ் துரை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணல் திருட்டு கும்பல் ஜெகதீஷ் துரை மீது டிராக்டரை கொண்டு மோதினார்கள். பின்னர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இதையடுத்து விபத்து நடந்தது போன்று போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி விஜய நாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், கிருஷ்ணன், முருகப்பெருமாள், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட முருகன், கிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். #tamilnews
    அசாம் மாநிலத்தில் 88 உயிர்களை பறித்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #CBICourt #Assamserialblast
    கவுகாத்தி:

    அசாம்  மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கைகவ்ன், பார்பேட்டா ஆகிய பகுதிகளில் கடந்த 30-10-2008 அன்று அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 88 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பலர்மீது குற்றம்சாட்டி கவுகாத்தி நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி  அபரேஷ் சக்ரபர்த்தி கடந்த 28-ம் தேதி தீர்ப்பளித்தார்.



    போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 15 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விபரம் 30-ம் தேதி (இன்று) தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி  அபரேஷ் சக்ரபர்த்தி உத்தரவிட்டார்.

    குற்றவாளிகள் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருவர் தண்டனைக்கான காலத்தை இதற்கு முன்னர் சிறையில் கழித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். #CBICourt #Assamserialblast
    பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.
     
    இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

    பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.



    இதற்கிடையே, பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்  ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

    பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம்  ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17-ம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், மற்ற குற்றவாளிகளான குல்தீப் சிங், நிர்மல் சிங், கிரிஷன் லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    மேலும், அவர்கள் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு தேனி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

    தேனி:

    தேனி அருகே வீரபாண்டி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மந்திரி.தேனி யூனியன் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். உறவினர்களான இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. எனவே இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கோடீஸ்வரன், மனைவி தெய்வக்கனி, மகன் ரமேஷ்குமார், உறவினர்கள் செல்வம், செல்வராணி, கோபிகண்ணன், சந்திரா, மலைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து மந்திரியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.

    இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து கோடீஸ்வரன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு நடைபெறும் போது மலைச்சாமி இறந்து போனார்.

    இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட கோடீஸ்வரன், ரமேஷ்குமார், தெய்வக்கனி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார். ஆயுள்தண்டனை விதிக்கபட்ட ரமேஷ் குமார் போலீஸ்காரர் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×