என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
- மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுட்கால சிறை தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் வினோத் (வயது27). இவர் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து கல்லூரி மாணவி பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்கள் வினோத் வீட்டில் சென்று கேட்டபோது திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது குறித்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்து. இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி ஆனந்தன் வினோத்திற்கு கல்லூரி மாணவியை பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதற்காக ஆயுள் காலம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மேலும் வஞ்சனை செய்ததற்காக ஒரு வருடம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.






