search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி கொலை வழக்கில்   இரண்டாவது மனைவி மகன் மருமகளுக்கு ஆயுள் தண்டனை
    X

    விவசாயி கொலை வழக்கில் இரண்டாவது மனைவி மகன் மருமகளுக்கு ஆயுள் தண்டனை

    • விவசாயி கொலை வழக்கில் அவரது இரண்டாவது மனைவி மகன் மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    • திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் சாமிநாதன் (வயது 90) இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். முதல் மனைவிக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தை பராமரிக்க முதல் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவி பஞ்சவர்ணத்திற்கு தங்கமணி என்ற மகனும், சாந்தி என்ற மருமகளும் உள்ளனர். சாமிநாதன் தன்னிடம் இருந்த சொத்துக்களை தனது பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துவிட்டு, தனது கடைசி காலத்துக்காக ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயரில் வைத்துக் கொண்டு, இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது தனது பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும், இரண்டாவது மனைவி மகன் தங்கமணியின் மகனுக்கு சாந்தியை கார்டியனாக காண்பித்து உயிர் எழுதி வைத்துள்ளார், அதில் முதல் மனைவியின் மகன் தர்மராஜ் அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் பாதியை கேட்டு தகராறு செய்துள்ளார், சாமிநாதன் உயிரோடு இருந்தால் நிலத்தை பாதி எழுதி கொடுத்து விடுவான் என திட்டமிட்டு சொத்து தகராறு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அன்று இரவு இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி மூவரும் சேர்ந்து சாமிநாதனை வெட்டி கொலை செய்து விட்டனர். விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிவில் இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி, மருமகள் சாந்தி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000- அபராதமும் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×