search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli court"

    • நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.
    • இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    நெல்லை மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலைப் பெற்ற உறவினர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2-ந் தேதி அடக்கம் செய்தனர்.

    இவரது கொலைக்கு பழி வாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

    இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

    எனவே கண்ணன் கொலை வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும், அதுவரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணா தாஸ் ஆஜராகி, கண்ணன் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலர் குற்றப் பின்னணியை கொண்டவர்கள். ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றவர்கள். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் மகன் கொலை வழக்கை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நெல்லையில் மணல் கடத்தலை தடுத்த ஏட்டு கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்டது வடக்கு விஜய நாராயணம். இங்குள்ள போலீஸ் நிலையத்தில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ்துரை (வயது 33).

    இவர் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி இரவு ரோந்து பணியை முடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கக்கன்நகர் விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே ஒரு டிராக்டர் மணல் திருடி கொண்டு வேகமாக சென்றது. உடனே ஜெகதீஷ் துரை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணல் திருட்டு கும்பல் ஜெகதீஷ் துரை மீது டிராக்டரை கொண்டு மோதினார்கள். பின்னர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இதையடுத்து விபத்து நடந்தது போன்று போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி விஜய நாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், கிருஷ்ணன், முருகப்பெருமாள், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட முருகன், கிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். #tamilnews
    அடுத்த மாதம் 12-ந்தேதி நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #SVeShekher

    நெல்லை:

    பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது நெல்லை ஜெ.எம்-1 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து அடுத்த மாதம் ஜூலை 12-ந்தேதி எஸ்.வி.சேகர் நெல்லை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார். #SVeShekher #TirunelveliCourt

    ×