என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai murder"

    • கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சினையில் கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர் ஷா மற்றும் நோட்டமிட்டு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்திருந்தனர். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.


    இந்நிலையில், நேற்று நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகம்மதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழு கையை முடித்துவிட்டு வெளியே வருவதை நோட்டமிட்டு கொலை யாளிகளுக்கு தகவல் அளிப்பதற்காக காத்திருந்த 16 வயது சிறுவனுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனால் கொலையில் பீர் முகமதுவுக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றா லும், கொலை சம்பவம் நடக்கப்போவது தெரிந்தும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறி போலீசார் அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். இதுவரை 5 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே தலைமறை வாக உள்ள நூர்நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அந்த தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலையில் தொடர்புடை யவர் பெண் என்பதால் சகஜமாக சந்தேகப்படும் வீடுகளுக்குள் சென்று தேட முடியவில்லை.

    இதனால் தனிப்படையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தால் தேடுதல் எளிதாகும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இன்று தனிப்படை யில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீஸ் சேர்ந்து, நூர்நிஷாவை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.
    • உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார்.

    கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற இவர், நெல்லை டவுன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி நேற்று அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, ஜாகீர்உசேன் பிஜிலி உடலை கைப்பற்றி விசாரணை நடததினர். இதில், ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் இடப்பிரச்சினை காரணமாக, கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து ஜாகீர் உசேனை கொலை செய்தததும் தெரிய வந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் கார்த்திக், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருன்னிஷாவின் சகோதரர் அக்பர்ஷா ஆகியோர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தி, நூருன்னிஷா, கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    இந்த கொலையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருன்னிஷா ஆகியோரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன், அருணாச்சாலம் உள்ளிட்டோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தலைமறைவான தம்பதியை பிடிக்க மதுரை, தென்காசி, நெல்லையின் புறநகர் பகுதிகளில் தனித்தனி குழுவாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாகீர் உசேன் பிஜிலியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டணி என்ற அமைப்பினை ஏற்படுத்தி மற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலினை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

    • சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
    • சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    அப்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும், அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது, இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
    • வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).

    மாயாண்டி நேற்று கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி கோர்ட்டில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் நேற்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.

    அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மனோராஜ் வாக்குமூலமாக கூறியதாவது:-


    எனது சகோதரன் ராஜாமணியை எவ்வித காரணமும் இன்றி மாயாண்டி வெட்டிக் கொலை செய்தார். இதனால் எனது குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்தனர். இதனை பார்த்து எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது மாயாண்டியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். தொடர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில், அவர் கோவையில் இருந்து வழக்கு விசாரணைக்காக நேற்று கோர்ட்டுக்கு வருவதை அறிந்தேன்.

    இதனால் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து காரில் கோர்ட்டு எதிரே காத்திருந்தேன். அப்போது அவர் ஓட்டலுக்கு சென்றுவிட்டு நீதிமன்ற நுழைவு வாயிலை நோக்கி சென்றார். உடனே அவரை சுற்றி வளைத்து கொலை செய்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், மாயாண்டி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாயாண்டி உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இதனால் கீழநத்தம் மேலூர், வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.
    • என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் ஒரே ஒருநபர் மட்டும் குற்றவாளிகளை பிடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ற செய்து கொண்டிருந்தனர்.

    என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது. நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.

    பணியில் இருக்கும் போலீசார் பணியை விட செல்போனில் மூழ்கி கிடப்பது வேதனையாக உள்ளது. கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்ஐ உய்கொண்டானுக்கு நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.

    நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).

    கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் கடந்த 20 ஆம் தேதி நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.

    அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

    நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை வழங்க வேண்டுமென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அந்த உத்தரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

    நெல்லை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலுடன் அவருடைய மனைவி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் குருசாமி (வயது 48). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு அவரது உடலை பார்த்த மற்ற உறவினர்கள், அவரது தலையில் ரத்த காயம் இருப்பதை பார்த்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், கூடுதல் சூப்பிரண்டு அரிகர கிரண் பிரசாந்த், பணகுடி இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் குருசாமியை சரமாரி தாக்கி, அரிவாளால் தலையில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பணகுடி போலீசார், குருசாமி மரணம் அடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். அப்போது குருசாமி உடலை முதலில் போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றது யார்? யார்? என்று விசாரணை நடந்தது.

    இது தொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள், உறவினர்கள் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குருசாமியின் மனைவி ஜெயந்தி (45) முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறினார். இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து மனைவியே குருசாமியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

    ஜெயந்தி அப்பகுதியில் உள்ள மற்றொரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த சூளையை நடத்தி வந்த செல்வின் ஆபிரகாம்(29) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது குருசாமிக்கு தெரிய வந்தது. அவர் மனைவியையும், கள்ளக்காதலனையும் கண்டித்தார். மேலும் மனைவியை தான் வேலை செய்யும் செங்கல் சூளைக்கு அழைத்தார்.

    தொடர்ந்து அவர் மனைவியையும், செல்வின் ஆபிரகாமையும் கண்டித்ததால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் குருசாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று செல்வின் ஆபிரகாம், குருசாமி வேலை செய்த செங்கல் சூளைக்கு சென்றார். அங்கு குருசாமி படுத்திருப்பதை பார்த்ததும் அவரை அடித்து கொலை செய்தார்.

    பின்னர் செல்வின் ஆபிரகாம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையறிந்த ஜெயந்தி கணவர் தவறி விழுந்து இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வின் ஆபிரகாமையும், ஜெயந்தியையும் பணகுடி இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×