என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வு பெற்ற போலீஸ்"

    • கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சினையில் கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர் ஷா மற்றும் நோட்டமிட்டு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்திருந்தனர். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.


    இந்நிலையில், நேற்று நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகம்மதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழு கையை முடித்துவிட்டு வெளியே வருவதை நோட்டமிட்டு கொலை யாளிகளுக்கு தகவல் அளிப்பதற்காக காத்திருந்த 16 வயது சிறுவனுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனால் கொலையில் பீர் முகமதுவுக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றா லும், கொலை சம்பவம் நடக்கப்போவது தெரிந்தும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறி போலீசார் அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். இதுவரை 5 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே தலைமறை வாக உள்ள நூர்நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அந்த தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலையில் தொடர்புடை யவர் பெண் என்பதால் சகஜமாக சந்தேகப்படும் வீடுகளுக்குள் சென்று தேட முடியவில்லை.

    இதனால் தனிப்படையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தால் தேடுதல் எளிதாகும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இன்று தனிப்படை யில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீஸ் சேர்ந்து, நூர்நிஷாவை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    சங்கரன்கோவில் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 60). இவர் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவரின் மனைவியும் மகன்களுடன் தங்குவதற்காக சென்று விட்டாராம். இதனால் தனிமையில் ஜெயராஜ் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனிமையில் இருந்த ஜெயராஜ் பூச்சி மருந்தை குடித்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்ட அவரின் உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×