நகைக்காக பெண் கொலை

நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
நகைக்காக பெண் கொலை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com