search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kill"

    • 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 4 பேர் திடீரென ராமராஜை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.
    • தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    திருச்சி

    பெரம்பலூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே திருநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ராமராஜ் (வயது 26). மீன் வியாபாரியான இவர் திருச்சி உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் வாரந்தோறும் மீன் வாங்க வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது மீன் கடையில் வேலை பார்க்கும் 3 பேருடன் காரில் பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு வந்தார்.

    உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டுக்கு சென்று மீன் வாங்கிக்கொண்டு, அவற்றை காரில் ஏற்ற வந்தபோது, அதிகாலை 4.15 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 4 பேர் திடீரென ராமராஜை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ராமராஜ் மீது பெரம்பலூர் மாவட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே செங்குட்டுவேல் என்பவரை கொலை செய்ததாக வழக்கு உள்ளது.

    செங்குட்டுவேலின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து ராமராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ராமராஜை கொலை செய்ய வந்த நபர்கள் அவர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கியபோது, அவரை கண்காணித்து, மார்க்கெட்டில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து மீன் மார்க்கெட் கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும், இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூருக்கு விரைந்தனர். அங்கு போலீசார் முகாமிட்டு விசாரணையை துரிதபடுத்தி உள்ளனர்.

    • பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • இருகுடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி பெரிய தெருவை சேர்ந்தவர் மாயவன். இவருடைய மனைவி கண்ணகி (வயது 42). அதே தெருவை சேர்ந்தவர் தர்மதுரை. இவருடைய மனைவி ஜோதி (48). இந்தநிலையில் கண்ணகி மகள் அனிதாவை, ஜோதியின் மகன் திருமணம் செய்து கொண்டதால் இருகுடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    நேற்று முன்தினம் கண்ணகியை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோதி கீழே கிடந்த கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி கிராமம் பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து
    • மாரிமுத்து என்னிடமும், ஊரில் உள்ள மற்ற பெண்களிடமும் தவறாக பேசுவதும், இரவு நேரத்தில் வீடுகளின் கதவுகளை தட்டுவதுமாக இருந்தார்.

    சங்ககிரி;

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி கிராமம் பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (52).

    தொழிலாளி

    தறித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கஸ்தூரிபட்டியில் வசிக்கும் சண்முகம் (41) என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சண்முகம், அவரது மனைவி கவிதா (34) ஆகியோருடன் மாரிமுத்துக்கு தகராறு ஏற்பட்டது.

    இது குறித்தும் சண்மு கம் உறவினர்களான பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் சண்முகம் வீட்டிற்கு வந்தனர். இதை பார்த்த மாரிமுத்து தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடினார்.

    கொலை

    அவரை துரத்தி சென்று வண்டியுடன் மடக்கிப் பிடித்து 5 பேரும் கஸ்தூரிபட்டி வாட்டர் டேங்க் அருகே அழைத்து சென்று மாரிமுத்துவை கட்டையாலும், கையாளும் மாறி மாறி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து மயங்கினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்துவிட்டார்.

    புகார்

    இதுகுறித்து மாரிமுத்து வின் அண்ணன் மகன் மோகன்ராஜ் (32) சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து கவிதா, சண்முகம், பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது போலீசில் கவிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    வாக்குமூலம்

    மாரிமுத்து என்னிடமும், ஊரில் உள்ள மற்ற பெண்களிடமும் தவறாக பேசுவதும், இரவு நேரத்தில் வீடுகளின் கதவுகளை தட்டுவதுமாக இருந்தார். இதேபோல் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இரவில் வீட்டின் கதவை தட்டியபோது மாரிமுத்துவின் முகத்தில் மிளகாய் பொடி தூவினேன்.

    கோபம்

    இதனால் எங்களுக்கு அவர் மீது கோபம் இருந்து வந்தது. அடுத்த முறை இம்மாதிரி பிரச்சினை செய்தால் உயிரோடு விடக்கூடாது என முடிவு செய்தோம். அதன்படி நேற்று அதிகாலை எங்கள் வீட்டுக்கு வந்த மாரிமுத்து தகாத வார்த்தையில் பேசி பிரச்சனை செய்தார்.

    இதனால் ஆத்திரத்தில் கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவை கீழே தள்ளிவிட்டு நீ உயிரோடு இருக்க கூடாது உயிரோடு இருந்தால் அடிக்கடி ஊரில் உள்ள பெண்களிடம் தொந்தரவு பண்ணுவ என்று சொல்லி, நான் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற தறிக்கு நாடா தள்ளும் கட்டையால் மாறி மாறி அடித்தோம். அதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் வந்து சத்தம் போடவே மாரிமுத்துவை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதையடுத்து கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • தங்கவேல் தனியார் மருத்துவமனையில் ஆம்பூலன்ஸ் டிரைவராக பணி செய்து வந்தார்.
    • அண்ணாமலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேல் (வயது 39). இவரது மனைவி சாரதா (30), மகன் சாய் தர்ஷன் (9), மகள் ஆத்விகா (6) ஆகியோருடன் திருப்பூரில் தங்கியுளளார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்பூலன்ஸ் டிரைவராக பணி செய்து வந்தார்.

    இவர் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான குறிஞ்சிப்பாடிக்கு வந்து, மீண்டும் திருப்பூர் நோக்கி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே சென்று கொண்டி ருந்தது. ஏ.சித்தூர் அரசு உயர்நிலை பள்ளி அருகே சென்ற போது பெரம்பலூரி லிருந்து கடலூர் நோக்கி வந்த கார், தங்கவேலு சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆம்பூலன்ஸ் டிரைவர் தங்கவேலு பலியானார். அவருடன் வந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

    நேருக்குநேர் மோதிய காரில் வந்த 5 பேரும் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம், பொம்மணப்பாடியை சேர்ந்த அண்ணாமலை (76) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விருத்தாசலம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    • பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர்
    • யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ஜே. ஜே. நகரில் 20க்கும் மேறபட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான நாய்கள் சுற்றி வருகின்றன.

    அவற்றிக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10க்கும் மேற்பட்ட நாய்கள் திடிரென்று வாந்தி எடுத்தபடி உயிரிழந்த்தாக கூறப்படுகிறது. அதே போல் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் இறந்து கிடந்துள்ளன. இது அந்த பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது; -எங்கள் பகுதியில் நிறைய தெருநாய்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய்கள் அங்கேங்கே வாந்தி எடுத்தப்படி சுருண்டு விழுந்து இறந்தது. யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.

    இது குறித்து விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு ரகளை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்  இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவரது மனைவி வினோதினி. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர்களது வீட்டின் அருகே உள்ள விஜயா என்பவரின் மருமகன் விக்னேஷ் மற்றும் இவரது நண்பர்கள் பிரவீன்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் அதிக சத்தம்போட்டு பேசி பின்னர் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு ரகளை செய்தனர்.

    இதனை முத்துக்குமரன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து முத்துக்குமரனை தடியால் தாக்கினர். மேலும் முத்துக்குமரன் கண் புருவத்தை கடித்து விட்டனர். அதோடு தலையை சீவி கொலை செய்து விடுவோம் என்று மிட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த முத்துக்குமரன் கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டர். இது குறித்து அவரது மனைவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
    • பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழ்க்குடி கிராமத்தில் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூலாங்கால் கிராமத்ைத சேர்ந்த பைசல் என்பவருக்கும், விழா கமிட்டியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் சேக்அப்துல்லா(வயது24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    நிைலமை மோசமாகி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்ேபாது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து பரளச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், தலைமை ஏட்டு ராஜூ ஆகியோர் இருதரப்பினரை கண்டித்து சமரசமாக செல்லுமாறு எச்சரித்தனர்.

    அப்போது சேக் அப்துல்லா மற்றும் 17 வயதுடைய நபர் சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டுவையும் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    • பரமத்தி அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்திவேலூர்,

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌஸ். இவரது மனைவி சசிகலா என்கிற மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சசிகலா என்கிற மும்தாஜ் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து பார்த்து இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • குடிபோதையில் கொலை செய்த நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை பாளை யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரையின் மகன் இமானுவேல் ராஜா என்பது தெரியவந்தது.

    தென்காசி மாவட்டம் முறம்பு அருகில் உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இவரது தாத்தா முத்துச்சாமி வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த இமானுவேல் ராஜா சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளி ராஜ், பொன்னுச்சாமி, அருண்கு மார், தங்கபாண்டி, மருது பாண்டி ஆகியோருடன் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது குடிபோதை யில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து இமானுவேல் ராஜாவை கொலை செய்ததாக சந்தே கிக்கப்படுகிறது. இதுகுறித்து அவரது தாத்தா முத்துச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

    • இரு நபர்களுக்கும் சொத்து தகராறு பிரச்சினை நிலுவையில் உள்ளது.
    • செல்வகுமாரை அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    அம்மாபேட்டைஅருகே உள்ள புலவர் நத்தம், குடியான தெருவை சேர்ந்த வர் ஜவகர் என்பவரது மகன் ராஜ்மோகன் (39).

    இவருக்கும்அவரது உறவினரான அவளிவ நல்லூரை அடுத்த சடையங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்ப வரது மகன் செல்வ க்குமாருக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    அதன் காரணமாக ராஜ்மோகனை, செல்வக்குமார் கடத்தி வந்து அவளிவநல்லூர் கடைத்தெருவில் வெட்டியு ள்ளனர்.

    இதனால் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் துடிதுடித்து இறந்துள்ளார்.

    இறந்த ராஜ்மோகன் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்காக அனுப்பி வைத்து தப்பி ஓடிய செல்வகுமாரை அம்மாபேட்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ரவுடி தலை துண்டித்து கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • முன் விரோதத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தே கிக்கின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பண்ணவயலைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 42). நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் முத்துப்பாண்டி செங்கமடை சாலையில் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி.க்கள் கணேஷ்குமார் (தேவகோட்டை), ராஜூ (ராமநாதபுரம்) மற்றும் போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தலை தனியாகவும், உடல் தனியாகவும் துண்டித்து கொடூரமாக கொலையுண்டு கிடந்த முத்துப்பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலையான முத்துப்பாண்டி மீது கொலை, கொள்ளை, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்ற வழக்கு தொடர்பாக சிறைக்கு சென்றிருந்த முத்துப்பாண்டி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மீண்டும் அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முத்துப்பாண்டியால் பாதிக்கப்பட்டவர்கள் முன் விரோதத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    இடி தாக்கி 7 ஆடுகள் பலியாகின.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் ஆண்டி (வயது 50). இவர் 15ஆடுகள் வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (35) என்பவர் 19 ஆடுகள் வளர்த்து வந்தார். 

    குலசேகரன்கோட்டை பகுதியல் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை அந்த 30 நிமிடங்கள் பெய்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கூவாகரடு அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை இடி தாக்கியது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    அதில் ஆண்டிக்கு சொந்தமாக 4 ஆடுகளும், கருப்பு சாமிக்கு சொந்தமான 3 ஆடுகளும் அடங்கும்.இதுகுறித்து தகவலறிந்த நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    வாடிப்பட்டி கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆடுகளை உடல் கூறு ஆய்வு செய்தார்.
    ×