என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான ஆடுகள்
இடி தாக்கி 7 ஆடுகள் பலி
இடி தாக்கி 7 ஆடுகள் பலியாகின.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் ஆண்டி (வயது 50). இவர் 15ஆடுகள் வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (35) என்பவர் 19 ஆடுகள் வளர்த்து வந்தார்.
குலசேகரன்கோட்டை பகுதியல் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை அந்த 30 நிமிடங்கள் பெய்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கூவாகரடு அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை இடி தாக்கியது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
அதில் ஆண்டிக்கு சொந்தமாக 4 ஆடுகளும், கருப்பு சாமிக்கு சொந்தமான 3 ஆடுகளும் அடங்கும்.இதுகுறித்து தகவலறிந்த நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாடிப்பட்டி கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆடுகளை உடல் கூறு ஆய்வு செய்தார்.
Next Story






