குடிபோதையில் கொலை செய்த நண்பர்களுக்கு வலைவீச்சு

21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். குடிபோதையில் கொலை செய்த நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
குடிபோதையில் கொலை செய்த நண்பர்களுக்கு வலைவீச்சு
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை பாளை யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரையின் மகன் இமானுவேல் ராஜா என்பது தெரியவந்தது.

தென்காசி மாவட்டம் முறம்பு அருகில் உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இவரது தாத்தா முத்துச்சாமி வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த இமானுவேல் ராஜா சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளி ராஜ், பொன்னுச்சாமி, அருண்கு மார், தங்கபாண்டி, மருது பாண்டி ஆகியோருடன் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது குடிபோதை யில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து இமானுவேல் ராஜாவை கொலை செய்ததாக சந்தே கிக்கப்படுகிறது. இதுகுறித்து அவரது தாத்தா முத்துச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com