வாகனம் மோதி பெண் பலி

பரமத்தி அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் பலியானர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
வாகனம் மோதி பெண் பலி
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌஸ். இவரது மனைவி சசிகலா என்கிற மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சசிகலா என்கிற மும்தாஜ் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து பார்த்து இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com