திருவாடானையில் ரவுடி தலை துண்டித்து கொலை

ரவுடி தலை துண்டித்து கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். முன் விரோதத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தே கிக்கின்றனர்.
கொலையுண்ட முத்துப்பாண்டி
கொலையுண்ட முத்துப்பாண்டி
Published on

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பண்ணவயலைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 42). நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் முத்துப்பாண்டி செங்கமடை சாலையில் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி.க்கள் கணேஷ்குமார் (தேவகோட்டை), ராஜூ (ராமநாதபுரம்) மற்றும் போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தலை தனியாகவும், உடல் தனியாகவும் துண்டித்து கொடூரமாக கொலையுண்டு கிடந்த முத்துப்பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலையான முத்துப்பாண்டி மீது கொலை, கொள்ளை, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்ற வழக்கு தொடர்பாக சிறைக்கு சென்றிருந்த முத்துப்பாண்டி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மீண்டும் அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முத்துப்பாண்டியால் பாதிக்கப்பட்டவர்கள் முன் விரோதத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com