search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏட்டு"

    • கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
    • பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழ்க்குடி கிராமத்தில் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூலாங்கால் கிராமத்ைத சேர்ந்த பைசல் என்பவருக்கும், விழா கமிட்டியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் சேக்அப்துல்லா(வயது24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    நிைலமை மோசமாகி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்ேபாது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து பரளச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், தலைமை ஏட்டு ராஜூ ஆகியோர் இருதரப்பினரை கண்டித்து சமரசமாக செல்லுமாறு எச்சரித்தனர்.

    அப்போது சேக் அப்துல்லா மற்றும் 17 வயதுடைய நபர் சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டுவையும் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    • அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
    • துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது.

    செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் இருந்த அடைப்புகளை அகற்றினார். இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையில் தண்ணீர் வடிந்தது. இதனை கேள்விப்பட்ட மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், ஏட்டு ராமனை நேரில் வரவழைத்து பாராட்டினார். துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

    • முறைகேடு புகார்கள் எதிரொலி
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபால் (வயது 39).

    இவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக போலீஸ் ஏட்டு கோபால் மீது பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக விசா ரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். அதன்படி ஏட்டு கோபால் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் புகார்கள் உறுதி செய்யப்பட்டதால் அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார். ஏட்டு கோபால் மீது துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு விவகாரம் குமரி மாவட்ட போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண் போலீசுடன் ஏட்டு உல்லாசமாக இருந்தாரா? என உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உண்மையிலேயே உல்லாசத்தில் ஈடுபட்டனரா?

    மதுரை

    மதுரை மாநகரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஏட்டு வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் இதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று 2 பேரும் பணியில் இருந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் அனைவரும் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் உடை மாற்றும் அறையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    காதல் ஜோடிகளின் திரைமறைவு ரகசியம் அம்பலத்துக்கு வந்ததும், 2 பேரும் மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்போது காவல் நிலையத்தில் எத்தனை பேர் பணியில் இருந்தனர்? குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உண்மையிலேயே உல்லாசத்தில் ஈடுபட்டனரா? போலீஸ் நிலையத்திற்கு வந்து நீண்ட நேரமாக காத்து இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர் யார்? 2 பேரையும் கையும் களவுமாக எந்த போலீஸ்காரர் பிடித்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் காவல்நிலையத்தில் உள்ளகண்காணிப்பு காமிரா காட்சி தொகுப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், "போலீஸ் நிலையத்தில் அந்த நிகழ்வு உண்மையாக நடந்ததா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றார்.

    ×