பெண் போலீசுடன் ஏட்டு உல்லாசமாக இருந்தாரா? - உயர் அதிகாரிகள் விசாரணை

பெண் போலீசுடன் ஏட்டு உல்லாசமாக இருந்தாரா? என உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.உண்மையிலேயே உல்லாசத்தில் ஈடுபட்டனரா?
பெண் போலீசுடன் ஏட்டு உல்லாசமாக இருந்தாரா? - உயர் அதிகாரிகள் விசாரணை
Published on

மதுரை

மதுரை மாநகரில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஏட்டு வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் இதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று 2 பேரும் பணியில் இருந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் அனைவரும் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் உடை மாற்றும் அறையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

காதல் ஜோடிகளின் திரைமறைவு ரகசியம் அம்பலத்துக்கு வந்ததும், 2 பேரும் மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது காவல் நிலையத்தில் எத்தனை பேர் பணியில் இருந்தனர்? குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உண்மையிலேயே உல்லாசத்தில் ஈடுபட்டனரா? போலீஸ் நிலையத்திற்கு வந்து நீண்ட நேரமாக காத்து இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர் யார்? 2 பேரையும் கையும் களவுமாக எந்த போலீஸ்காரர் பிடித்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் காவல்நிலையத்தில் உள்ளகண்காணிப்பு காமிரா காட்சி தொகுப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், "போலீஸ் நிலையத்தில் அந்த நிகழ்வு உண்மையாக நடந்ததா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com