என் மலர்

  நீங்கள் தேடியது "beat"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #ATPFinal #RogerFederer #AlexanderZverev
  லண்டன்:

  டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச்(செர்பியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

  நேற்று நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர், 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார். 1 மணி 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 5-7, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #WomenT20 #WorldCup #Ireland #Australia
  புரோவிடென்ஸ்:

  பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது.  ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கிம் காரத் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 31 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 56 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகி விருதையும் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #WomenT20 #WorldCup #India #Pakistan
  புரோவிடென்ஸ்:

  பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது.  இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தானுக்கு, இந்திய பவுலர்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். ஆயிஷா ஜாபர் (0), உமைமா சோகைல் (3 ரன்) இருவரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. அதன் பிறகு மிடில் வரிசையில் பிஸ்மா மாரூப் (53 ரன்), நிதா தர் (52 ரன்) இருவரும் அரைசதம் அடித்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட வைத்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  அடுத்து களம் புகுந்த இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 56 ரன்களும் (47 பந்து, 7 பவுண்டரி), மந்தனா 26 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

  முன்னதாக கிராஸ் இஸ்லெட்டில் ஏ பிரிவில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையே நடக்க இருந்த லீக் ஆட்டம் பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. #WomenT20 #WorldCup #India #Pakistan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Indian #SriLanka #Cricket #INDvsSL
  காலே:

  மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். காலேவில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணியை 98 ரன்னில் சுருட்டிய இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த நிலையில் இந்தியா- இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 219 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாத்யா 68 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்னும், ஹேமலதா 35 ரன்னும் எடுத்தனர். முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஸ்மிர்தி மந்தனா 14 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி தரப்பில் ஜெயன்கானி 3 விக்கெட்டும், பிரபோத்ஹானி, வீரக்கொடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

  பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 48.1 ஓவர்களில் 212 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜெயன்கானி 57 ரன்னும், ஸ்ரீவர்தனே 49 ரன்னும், நிலாக்‌ஷி டி சில்வா 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.  #Indian #SriLanka #Cricket #INDvsSL
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவதானப்பட்டி அருகே வழக்கை வாபஸ் பெற கோரி வீட்டை அடித்து நொறுக்கிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

  தேவதானப்பட்டி:

  தேவதானப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காமாட்சி (வயது 35) என்பவரது குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் காமாட்சி குடும்பத்தில் ஒருவரை கைது செய்தனர்.

  சம்பவத்தன்று காமாட்சி, வனிதா (25), அமராவதி (55) ஆகிய 3 பேரும் முனீஸ்வரி வீட்டுக்கு சென்று போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெற கூறியுள்ளனர். அதற்கு முனீஸ்வரி மறுத்துள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் முனீஸ்வரியை தாக்கி கீழே தள்ளினர். மேலும் வீட்டு கூரையை உடைத்து சேதப்படுத்தி பொருட்களையும் சூறையாடினர். இது குறித்து முனீஸ்வரி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வீட்டை சூறையாடிய வனிதா உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர், நிஷியாகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RogerFederer
  நியூயார்க்:

  ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று இந்திய நேரப்படி அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் நிஷியாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். பெடரர் அடுத்து பிரான்சின் பெனோய்ட் பேரை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 7-6 (5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்கரிட்டா காஸ்பர்யனை (ரஷியா) 1 மணி 45 நிமிடங்கள் போராடி விரட்டியடித்தார். இதே போல் முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவா (ரஷியா) 6-2, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் 39 வயதான பட்டி ஷின்டரை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா பிய்க் (பியூர்டோரிகோ), தன்னை எதிர்த்த ஸ்டெபானி வோஜிலிக்கு (சுவிட்சர்லாந்து) எந்த ஒரு கேமையும் விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் துவம்சம் செய்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். #Cincinnati #SerenaWilliams
  சின்சினாட்டி:

  சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #WorldJuniorSquash #Championship #Egypt
  சென்னை:

  13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்தது. 28 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளுக்கான ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் எகிப்து, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

  முதல் ஆட்டத்தில் எகிப்தின் மார்வன் டாரெக் 12-10, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்க் வாலை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் எகிப்தின் ஓமர் எல் டோர்கி 13-11, 11-4, 11-4 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் சாம் டோட்டை வீழ்த்தினார். இதையடுத்து 2-0 என்ற கணக்கில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  இதற்கிடையே, இந்த போட்டிக்காக சென்னைக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்க ஸ்குவாஷ் அணியின் மேலாளரும், பயிற்சியாளருமான கிரஹாம் பிரையர் (வயது 67) நேற்று மரணம் அடைந்தார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக அணி வீரர்களுடன் பஸ்சில் ஏறுவதற்கு புறப்பட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். #WorldJuniorSquash #Championship #Egypt 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. #India #NewZealand #Hockey
  பெங்களூரு:

  நியூசிலாந்து ஆக்கி அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

  இந்திய அணியில் ரூபிந்தர் பால்சிங் 2-வது மற்றும் 34-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 15-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 38-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் ஸ்டீபன்ஸ் ஜென்னெஸ் 26-வது மற்றும் 55-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பணத் தகராறில் பெண் போலீசின் கன்னத்தில் அறை விட்ட போலீஸ்காரர் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  அவனியாபுரம்:

  அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் மாலா (வயது38). இவர் அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் உக்கிரபாண்டியிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.

  இந்த நிலையில் மாலா 6 மாதம் மருத்துவ விடுப்பில் சென்றார். நேற்று இரவு பணிக்கு வந்த மாலாவிடம் உக்கிரபாண்டி, கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் உக்கிரபாண்டி மாலாவின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்டார். அதன் பின்னர் மாலா தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

  இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  ×