search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி
    X

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #WomenT20 #WorldCup #Ireland #Australia
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது.



    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கிம் காரத் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 31 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 56 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகி விருதையும் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
    Next Story
    ×