என் மலர்
நீங்கள் தேடியது "arrested women"
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காமாட்சி (வயது 35) என்பவரது குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் காமாட்சி குடும்பத்தில் ஒருவரை கைது செய்தனர்.
சம்பவத்தன்று காமாட்சி, வனிதா (25), அமராவதி (55) ஆகிய 3 பேரும் முனீஸ்வரி வீட்டுக்கு சென்று போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெற கூறியுள்ளனர். அதற்கு முனீஸ்வரி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் முனீஸ்வரியை தாக்கி கீழே தள்ளினர். மேலும் வீட்டு கூரையை உடைத்து சேதப்படுத்தி பொருட்களையும் சூறையாடினர். இது குறித்து முனீஸ்வரி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வீட்டை சூறையாடிய வனிதா உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






