search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cincinnati Open"

    • இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இதன் பின்னர் தனது தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    இறுதியில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பலிவாங்கும் விதமான இந்த இறுதிபோட்டியில் அல்காரஸை வீழ்த்தினார் ஜோகோவிச்.

    • இறுதி போட்டியில் கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
    • பெண்கள் பிரிவில் கார்சியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 4-ம் நிலை வீரரான கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் கோரிச் 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். தரவரிசையில் 152-வது இடம் வகிக்கும் கோரிச் முன்னணி வீரர் சிட்சிபாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்)-பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மோதினர். இதில் கார்சியா 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

    கார்சியா தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றை அடைந்து தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். #Cincinnati #SerenaWilliams
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 
    அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா, ஷரபோவா, முர்ரே ஆகியோருக்கு தரநிலை வழங்கப்படவில்லை.
    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படுவது சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடராகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி நடைபெறும்.



    இந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், ஷரபோவா மற்றும் முர்ரே ஆகியோர் பங்கேற்று விளையாடுகிறார்கள்.



    ஆனால் இவர்களுக்கு இந்த தொடருக்கான தரநிலை வழங்கப்படவில்லை. ரபெல் நடால், சிமோனா ஹாலெப் முதல் இடத்தை பிடித்துள்ளனர். பெடரர் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வரும் திங்கட்கிழமை (13-ந்தேதி) தொடங்குகிறது.
    ×