search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sumit Nagal"

    • களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) எதிர்கொண்டார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 93-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) எதிர்கொண்டார். நேற்று முன்தினம் 2-வது செட்டுடன் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த ஆட்டம் மறு நாளான நேற்று தொடர்ந்து நடந்தது. 2-வது செட்டை வசப்படுத்தி ஹோல்கருக்கு அதிர்ச்சி அளித்த சுமித் நாகல், கடைசி செட்டை தவற விட்டார்.

    2 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஹோல்கர் ருனே 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை போராடி தோற்கடித்தார். 42 ஆண்டுக்கு பிறகு மான்டி கார்லோ டென்னிசில் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையோடு நாகல் வெளியேறினார்.

    3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரும், 2 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ முசெட்டியை (இத்தாலி) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவர் 1 மணி 58 நிமிடம் எடுத்துகொண்டார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் லாரன்சோ சொனேகோவுடன் மோதினார்.

    முதல் செட்டை சுமித் நாகல் 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சொனேகா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.
    • தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகலை ஹாங்காங் வீரர் வீழ்த்தினார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.

    நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஹாங்காங்கின் சாக் லாம் கோல்மேன் வாங்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்த வாங் அடுத்த இரு செட்களை 6-1, 7-5 என கைப்பற்றி அசத்தினார்.

    இதன்மூலம் சுமித் நாகல் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.

    • இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி அடைந்தார்.

    இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், கனடாவின் மிலியோஸ் ரவ்னிக்குடன் மோதினார்.

    இதில் மிலியோஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னணி வீரர் ரபேல் நடால் போட்டியில் இருந்து விலகியதால் ஸ்மித் நாகலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி அடைந்தார்.

    புதுடெல்லி:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், தென் கொரியாவின் ஹாங் சியோங் சானுடன் மோதினார்.

    இதில் ஸ்மித் நாகல் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட சியோங் சான் அடுத்த இரு செட்களை 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.
    • சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.

    சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார். இதனையடுத்து நடந்த 3 செட்டையும் சீன வீரர் அதிரடியாக வீழ்த்தினார். சுமித் நாகல் 2-6, 6-3, 7-5, 6-4 என தோல்வியடைந்தார். இந்த போட்டி இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் அவர் 6-4, 3-6, 6-4 என்ற கணக்கில் கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

    இதில் நாகல் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.

    இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • சென்னை ஓபன் அரையிறுதியில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேறி உள்ளார். இன்று ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் உடன் சுமித் நாகல் மோதினார். இதில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற சுமித் நாகல், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாகல் கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பின்னர் நவம்பர் மாதம் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது பார்முக்கு திரும்பி, 16 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அடுத்து சனிக்கிழமை நடைபெற உளள் அரையிறுதி ஆட்டத்தில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    ×