என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    நம்பர் 1 வீரருக்கு வந்த சோதனை: சீனா செல்ல விசா மறுத்ததால் உதவி கோரிய சுமித் நாகல்
    X

    நம்பர் 1 வீரருக்கு வந்த சோதனை: சீனா செல்ல விசா மறுத்ததால் உதவி கோரிய சுமித் நாகல்

    • சீனாவின் செங்டு மாகாணத்தில் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
    • இந்தியாவின் சுமித் நாகலுக்கு சீனா செல்ல விசா மறுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    சீனாவின் செங்டு மாகாணத்தில் செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் சுமித் நாகல் விசாவுக்கு அப்ளை செய்தார். ஆனால் அவருக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீனா தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது.

    இந்நிலையில், சுமித் நாகல் எக்ஸ் வலைதளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செங்டு ஓபனில் அவசியம் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கும் செல்ல முடியும். எனவே தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக உடனே விரைந்து உதவி செய்ய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×