search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகாத வார்த்தையால் பேசியதால் தீர்த்துக் கட்டினோம்
    X

    கவிதா சண்முகம் பூபதி ராஜமாணிக்கம் சிவகுமார்

    தகாத வார்த்தையால் பேசியதால் தீர்த்துக் கட்டினோம்

    • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி கிராமம் பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து
    • மாரிமுத்து என்னிடமும், ஊரில் உள்ள மற்ற பெண்களிடமும் தவறாக பேசுவதும், இரவு நேரத்தில் வீடுகளின் கதவுகளை தட்டுவதுமாக இருந்தார்.

    சங்ககிரி;

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி கிராமம் பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (52).

    தொழிலாளி

    தறித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கஸ்தூரிபட்டியில் வசிக்கும் சண்முகம் (41) என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சண்முகம், அவரது மனைவி கவிதா (34) ஆகியோருடன் மாரிமுத்துக்கு தகராறு ஏற்பட்டது.

    இது குறித்தும் சண்மு கம் உறவினர்களான பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் சண்முகம் வீட்டிற்கு வந்தனர். இதை பார்த்த மாரிமுத்து தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடினார்.

    கொலை

    அவரை துரத்தி சென்று வண்டியுடன் மடக்கிப் பிடித்து 5 பேரும் கஸ்தூரிபட்டி வாட்டர் டேங்க் அருகே அழைத்து சென்று மாரிமுத்துவை கட்டையாலும், கையாளும் மாறி மாறி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து மயங்கினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்துவிட்டார்.

    புகார்

    இதுகுறித்து மாரிமுத்து வின் அண்ணன் மகன் மோகன்ராஜ் (32) சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து கவிதா, சண்முகம், பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது போலீசில் கவிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    வாக்குமூலம்

    மாரிமுத்து என்னிடமும், ஊரில் உள்ள மற்ற பெண்களிடமும் தவறாக பேசுவதும், இரவு நேரத்தில் வீடுகளின் கதவுகளை தட்டுவதுமாக இருந்தார். இதேபோல் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இரவில் வீட்டின் கதவை தட்டியபோது மாரிமுத்துவின் முகத்தில் மிளகாய் பொடி தூவினேன்.

    கோபம்

    இதனால் எங்களுக்கு அவர் மீது கோபம் இருந்து வந்தது. அடுத்த முறை இம்மாதிரி பிரச்சினை செய்தால் உயிரோடு விடக்கூடாது என முடிவு செய்தோம். அதன்படி நேற்று அதிகாலை எங்கள் வீட்டுக்கு வந்த மாரிமுத்து தகாத வார்த்தையில் பேசி பிரச்சனை செய்தார்.

    இதனால் ஆத்திரத்தில் கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவை கீழே தள்ளிவிட்டு நீ உயிரோடு இருக்க கூடாது உயிரோடு இருந்தால் அடிக்கடி ஊரில் உள்ள பெண்களிடம் தொந்தரவு பண்ணுவ என்று சொல்லி, நான் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற தறிக்கு நாடா தள்ளும் கட்டையால் மாறி மாறி அடித்தோம். அதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் வந்து சத்தம் போடவே மாரிமுத்துவை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதையடுத்து கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×